அமேசான்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் அசத்தலான சியோமி மி ஏ2.!
சியோமி மி ஏ2 சாதனத்தில் 20எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் தற்சமயம் சியோமி மி ஏ2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

32ஜிபி மெமரி கொண்ட இந்த சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000-ஆக உள்ளது, அதன்பின்பு 64ஜிபி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,500 என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலை ஆகஸ்ட் 8-ம் தேதி அமேசான் வலைதளத்தில் மட்டுமே வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி ஏ2
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:
சியோமி மி ஏ2 சாதனத்தில் 5.99-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பினே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
சியோமி மி ஏ2 சாதனத்தில் 20எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள்
இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி மி ஏ2 சாதனம் வெளிவரும். சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 2910எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications