Home
Mobile

சியோமியின் சர்ப்ரைஸ்: அடுத்த மாதமே வெளியாகிறது சியோமி மி ஏ2.!

உடன் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி, 6 ஜிபி வரை ரேம் போன்ற அம்சங்களையும், நோட் 5 ப்ரோ உடன் ஒப்பிடும்போது ஒரு குறைவான பேட்டரி திறனும் கொண்டிருக்கலாம்.

By Muthuraj

சியோமி நிறுவனம் அதன் சியோமி மிஏ 1 ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்தகட்ட பதிப்பான மி ஏ2 (அல்லது சியோமி மி 6எக்ஸ்) சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதை நாம் அறிவோம்.

சியோமியின் சர்ப்ரைஸ்: அடுத்த மாதமே வெளியாகிறது சியோமி மி ஏ2.!

சமீபத்தில் அக்கருவி மாதிரி எண் எம்1804டி2எஸ்சி என்கிற மர்மமான பெயரின் கீழ், சீன தரச்சான்றிதழ் தளமான டிஇஎன்ஏஏ-வில் (TENAA) காணப்பட்டுள்ளது.

சியோமியின் சர்ப்ரைஸ்: அடுத்த மாதமே வெளியாகிறது சியோமி மி ஏ2.!

சுவாரசியம் என்னவெனில் இக்கருவி அடுத்த மாதமே வெளியாகவுள்ளது. பார்ப்பதற்கு சமீபத்தில் வெளியான சிரோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ போன்று காட்சியளிக்கும் மி ஏ2 ஆனது, ஒரு புதிய சிவப்பு வண்ண மாறுபாட்டில் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் வெளியான சியோமி மி ஏ1 (அல்லது சியோமி மி 5எக்ஸ்) ஆனதும், ஒரு சிவப்பு வண்ண மாறுபாட்டில் இந்தியா உட்பட பல சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும்.!

ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும்.!

மாதிரி எண் மற்றும் லீக்ஸ் படங்கள் தவிர, கூறப்படும் சியோமி மி 2ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய எந்த விவரங்களும் இல்லை. ஆனாலும் கூட வருகிற ஏப்ரல் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே, இதர சந்தைகளில் மிஏ2 என்ற பெயரின் கீழ் வெளியாகும் இக்கருவி, சீனாவில் மட்டும் மி 6எக்ஸ் ஆக அறிமுகப்படுத்தப்படும்.

ஆண்ட்ராய்டு பி கொண்டு இயங்குமா.?

ஆண்ட்ராய்டு பி கொண்டு இயங்குமா.?

இங்கு எழும் ஒரே கேள்வி என்னவெனில் - மி 2ஏ ஆனது ஆண்ட்ராய்டு பி கொண்டு இயங்குமா.? என்பது தான். ஆண்ட்ராய்டு பி தளத்தின் நிலையான கட்டமைப்பானது ஆகஸ்ட் 2018-ல் தான் - கூகுளின் அப்டேட் டைம்லைனில் - பட்டியலிடப்படவுள்ளது. ஆக, இந்த அப்டேட் சார்ந்த எந்த உறுதிப்படுத்தல்களும் கிடையாது.

சியோமி மி 2ஏ (எதிர்பார்க்கப்படும்) அம்சஙகள்.!

சியோமி மி 2ஏ (எதிர்பார்க்கப்படும்) அம்சஙகள்.!

அம்சங்களை பொறுத்தமட்டில், சியோமி மி ஏ2 ஆனது ஒரு இரட்டை பின்பக்க கேமரா அமைப்புடன் வரும். அதாவது, சியோமி மி ஏ1-ல் காணப்பட்டதை போலவே, ஒரு முதன்மை கேமரா மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்டு வெளியாகும். உடன் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி, 6 ஜிபி வரை ரேம் போன்ற அம்சங்களையும், நோட் 5 ப்ரோ உடன் ஒப்பிடும்போது ஒரு குறைவான பேட்டரி திறனும் கொண்டிருக்கலாம்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
இதற்கிடையில் மி மிக்ஸ் 2எஸ் வெளியீடு.!

இதற்கிடையில் மி மிக்ஸ் 2எஸ் வெளியீடு.!

கூறப்படும் சியோமி மி 2ஏ அல்லது மி 6எக்ஸ் ஆனது, நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் அதே டிஸ்பிளே அளவை கொண்டு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கிடையில், சியோமி நிறுவனமானது இன்று சீனாவில் அதன் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்ட மி மிக்ஸ் 2எஸ் தலைமை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாகவும், இந்நிகழ்வில் நிறுவனத்தி சில ஐஓடி (இன்டர்நெட் ஆப் திங்ஸ்) தயாரிப்புகளும் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A2 Aka Mi 6X Pays a Visit to TENAA, Launch Might Happen Next Month. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X