6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் சியோமி மி ஏ2 அறிமுகம்.!
சியோமி மி ஏ2 சாதனத்தில் 20எம்பி +12எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இதற்கு முன்பு 4ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,பின்பு இன்று முதல் அமேசான் வலைதளத்தில் இந்த சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
சியோமி மி ஏ2 சாதனத்தில் 5.99-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பினே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சியோமி மி ஏ2 :
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

கேமரா:
சியோமி மி ஏ2 சாதனத்தில் 20எம்பி +12எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி மி ஏ2 சாதனம் வெளிவரும்.

விலை:
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 2910எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.
4ஜிபி ரேம் கொண்ட சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் கொண்ட சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications