தன் பொழப்பில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் சியோமி; அப்படி என்ன ஆச்சு.?

தை போன்றே மி 6எக்ஸ் ஆனது, மி ஏ2 என்கிற பெயரின் கீழ் இந்தியாவில் வெளியாகும் என்கிற பேச்சு கிளம்பியுள்ளது. இதில் மற்றொரு சுவாரசியமான விஷயமும் உள்ளது.

|

கடந்த வாரம் சீனாவில் வெளியான மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனை தொடர்ந்து, இணையம் மற்றும் யூடியூப் சேனல்களில் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றிய வாதங்களே நிகழ்கின்றது. அதை வெளியான அறிக்கைகளும் உறுதிப்படுத்துகின்றன.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை வெளிப்படையாக ஆளும், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன சியோமி அதன் மி 5எக்ஸ் ஸ்மார்ட்போனை (உலகளாவிய சந்தை) இந்தியாவில் மி ஏ1 என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்தது. அதை போன்றே மி 6எக்ஸ் ஆனது, மி ஏ2 என்கிற பெயரின் கீழ் இந்தியாவில் வெளியாகும் என்கிற பேச்சு கிளம்பியுள்ளது. இதில் மற்றொரு சுவாரசியமான விஷயமும் உள்ளது.

ரெட்மீ பிராண்டின் கீழ் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள்.!

ரெட்மீ பிராண்டின் கீழ் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள்.!

வெளியாகும் என கூறப்படும் மி ஏ2 ஆனது சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ரெட்மீ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் உடன் சேர்ந்து வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் வழியாக, சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் சிஇஓ ஆன, லெய் ஜுன், தனது சமீபத்திய இந்திய பயணத்தின்போது, ​ரெட்மீ பிராண்டின் கீழ் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதை இந்திய ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்பக்கத்தில் ஒரு 20 எம்பி செல்பீ கேமரா.!

முன்பக்கத்தில் ஒரு 20 எம்பி செல்பீ கேமரா.!

கூறப்படும் பட்ஜெட் ரெட்மீ ஸ்மார்ட்போன் ஆனது, நுழைவு நிலை ரெட்மீ அம்சங்களை கொண்டிருக்கும் குறிப்பாக ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி உடன் வரும். ஒளியியல் துறையை பொறுத்தவரை, மி ஏ2 ஆனது சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் இருக்கும் அதே கேமரா அமைப்பை கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம். அதாவது, பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பு - 12 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 20 எம்பி இரண்டாம் நிலை சென்சார் - ஆகியவைகளை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் ஒரு 20 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கலாம்.

ஒரே நேரத்தில் மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியானால்.?

ஒரே நேரத்தில் மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியானால்.?

விலைக்கு ஏற்ற அம்சங்களை பொறுத்தவரை, எந்த குறையும் வைக்காது என்று எதிர்பார்க்கப்படும் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனின் ஒரே ஒரு சிக்கல், அதன் உடன் சேர்ந்து வெளியாகும் மலிவான அண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் தான். ஆம், ஒரே நேரத்தில் மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியானால் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மீதான பார்வைகள் குறையும் என்பதை சியோமி அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியம்.

எம்மாதிரியான வியாபார தந்திரம்.?

எம்மாதிரியான வியாபார தந்திரம்.?

அதிலும் கூறப்படும் ஆண்ட்ராய்டு ஒன ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000/-க்கு மேல் என்கிற பட்ஜெட்டை கொண்டிருக்கும் இந்திய நுகர்வோர்களை குறிவைத்து களமிறங்கும் நேரத்தில் ரூ.20,000/- என்கிற மிட்-ரேன்ஜ் பிரிவில் சியோமி மி ஏ2 வெளியாவது எம்மாதிரியான வியாபார தந்திரம் என்பது புரியவில்லை. இது மி 2ஏ ஸ்மார்ட்போனின் விற்பனையை மட்டுமன்றி சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ வரிசை மற்றும் நிறுவனத்தின் மியூஐ கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களின் விற்பனையையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மீ எஸ்2

ரெட்மீ எஸ்2

இதற்கிடையில், சியோமி நிறுவனம், அதன் மற்றொரு மலிவு விலை சியோமி ரெட்மீ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ரெட்மீ எஸ்2 பற்றி ஏராளமான வதந்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் எதுவும் உறுதியற்றதாக இல்லை. இருப்பினும், ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் வருகையை கிட்டத்தட்ட உறுதி செய்யும் ஒரு தகவல், 91மொபைல்ஸ் வழியாக வெளியானது. கூறப்படும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ எஸ்2 ஆனது 3சி (சீன கட்டாய சான்றிதழ்) தளத்தில் காணப்பட்டதை 91மொபைல்ஸ் வெளிப்படுத்தியது.

3சி சான்றிதழ்.!

3சி சான்றிதழ்.!

இருப்பினும் ரெட்மீ எஸ்2-வின் வெளியீட்டு தேதி பற்றிய கேள்வி இன்னும் ஒரு மர்மம் தான். வெளியான ஊடக அறிக்கைகளின் படி, அதன் வெளியீடு நிகழ் இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம். 3சி சான்றிதழ் தளத்தில் சிக்கிய ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் அதன் அம்சங்களை பற்றிய தகவலைக் கொடுக்கவில்லை. இருந்தாலும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது

திரை விகிதம்.!

திரை விகிதம்.!

ரெட்மீ எஸ்2 ஆனது சமீபத்தில் TENNA தளத்தில் காணப்பட்டது. இது இன்னொரு சீன சான்றிதழ் வலைத்தளம் ஆகும். இதில் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் சில பிராதன அம்சங்களை காண முடிந்தது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு, பெஸல்-லெஸ் டிஸ்பிளே அதாவது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே கொண்டிருக்கும்.

12 எம்பி மற்றும் 8 எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா.!

12 எம்பி மற்றும் 8 எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா.!

இன்னும் சில அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மொழியை பொறுத்தவரை, சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் ஒற்றுப்போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்னும் விரிவாக வெளியான லீக்ஸ் அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மீ எஸ்2 ஆனது 5.99 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே, 12 எம்பி மற்றும் 8 எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா மற்றும் ஒரு 16 எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் செல்பீ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்.!

2 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்.!

2ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு இயங்கும் சியோமி ரெட்மீ எஸ்2 ஆனது மொத்தம் 3 வேரியண்ட்கள் வரவிருக்கிறது. ஆம், 2 ஜிபி ரேம் + 16 ஜிபி ரோம், 4 ஜிபி ரேம் + 32 ஜிபி ரோம் மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம் என்கிற மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகும். வண்ண மாறுபாடுகளை பொறுத்தவரை, கோல்ட், சாம்பல், பின்க், ரெட், ரோஸ் கோல்ட், சில்வர் மற்றும் வெள்ளை உட்பட பல மாடல்களில் வெளியாகும்.

பேட்டரி மற்றும் ஓஎஸ்; சியோமி மி6 எக்ஸ்-ன் விலை என்ன.?

பேட்டரி மற்றும் ஓஎஸ்; சியோமி மி6 எக்ஸ்-ன் விலை என்ன.?

ஒரு 3,080mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கொண்டு இயங்கும். வளர்ந்துவரும் சந்தைகளை, முக்கியமாக சீனா மற்றும் இந்தியாவை, இலக்காக கொண்டு தான் இந்த சியோமி ரெட்மீ எஸ்2 வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடந்த 25 ஆம் தேதி சீனாவில் வெளியான மி 6எக்ஸ்-ன் முழுமையான விலை மற்றும் அம்சங்களை பொறுத்தவரை, மொத்தம் மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ள சியோமி மி 6எக்ஸ்-ன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவியலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது தோராயமாக ரூ.16,900/-க்கும், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது சுமார் ரூ.19,000/-க்கும் மற்றும் இறுதியாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாடல் ஆனது சுமார் ரூ.21,000/-க்கும் இந்தியாவில் அறிமுகமாகலாம்.

சீன மற்றும் இந்திய விற்பனை.!

சீன மற்றும் இந்திய விற்பனை.!

ரெட், கோல்ட், ரோஸ் கோல்ட், ப்ளூ மற்றும் பிளாக் போன்ற ஐந்து வண்ண விருப்பங்கள் வெளியாகியுள்ள சியோமி மி 6எக்ஸ் (சியோமி மி ஏ2) ஆனது வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 27 ஆம் தேதி) முதல், சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இதன் இந்திய விற்பனை பற்றிய விவரங்கள் ஏதும் இல்லை.

How to Find a domain easily for your business (TAMIL)
மி 6எக்ஸ் (மி ஏ2) அம்சங்கள்.!

மி 6எக்ஸ் (மி ஏ2) அம்சங்கள்.!

சியோமி 6எக்ஸ் ஆனது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் குறுகிய பெஸல்கள் கொண்ட 5.99 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதாவது ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை போன்றே உள்ளது. இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட மியூஐ 9.5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி, அட்ரெனோ 512 ஜிபியூ மற்றும் 6ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது.

20 மெகாபிக்சல் செல்பீ கேமரா.!

20 மெகாபிக்சல் செல்பீ கேமரா.!

இந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சமாக அதன் கேமராக்கள் உள்ளன. இது மேம்பட்ட புகைப்படங்களை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு திறனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், சோனி IMX376 சென்சார், எப் / 1.75 துளை, நிலையான போக்கல் லெங்த் மற்றும் மென்மையான எல்இடி ப்ளாஷ் ஆகியவைகளை கொண்ட ஒரு 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

12 மெகாபிக்சல் மற்றும்  20 மெகாபிக்சல் ரியர் கேமரா.!

12 மெகாபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் ரியர் கேமரா.!

பின்பக்கத்தில், எப் / 1.75 துளை மற்றும் 1.25 மைக்ரான் பிக்சல் அளவு கொண்ட 12 மெகாபிக்சல் முதன்மை சோனி IMX486 சென்சார் மற்றும் அதே துளை மற்றும் 1 மைக்ரான் பிக்சல் அளவு கொண்ட 20 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சோனி IMX376 சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதன் பின்புற கேமராவானது பேஸ் டிடெக்ஷன் ஆட்டோ போகஸ் மற்றும் டூயல் டோன் எல்இடி ப்ளாஷ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ் அன்லாக், கைரேகை சென்சார்.!

பேஸ் அன்லாக், கைரேகை சென்சார்.!

சியோமி 6எக்ஸ்-ன் அனைத்து கேமராக்களுமே, சிறந்த நிறங்கள், போர்ட்ரெயிட், பொக்கே விளைவுகள், ஏஐ ஸ்மார்ட் பியூட்டி 4.0 போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஏஐ கொண்டு இயங்கும் மொழிபெயர்ப்பு திறனையும் கொண்டுள்ளது. அதாவது சீன மொழியை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஜப்பனீஸ், கொரிய மற்றும் பல இந்திய மொழிகளுக்கு மாற்றம் செய்யும் திறனை கொண்டுள்ளது. பேஸ் அன்லாக் கொண்டிருக்கும் மறுபக்கம் கைரேகை சென்சார் ஒன்றையும் அதன் பின்புறத்தில் கொண்டு உள்ளது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை.!

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை.!

3010mAh என்கிற பேட்டரி திறன் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் க்விக்சார்ஜ் 3.0-க்கான ஆதரவுடன் வருகிறது. அது 30 நிமிடங்களில் 0-ல் இருந்து 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. மி 6எக்ஸ் (மி 2ஏ) ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் Wi-Fi / A / b / g / n / ac, வைஃபை டைரக்ட், மிராகேஸ்ட், ப்ளூடூத் 5.0, ஐஆர் எமிட்டர், யூஎஸ்பி டைப் -சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இருப்பினும், 3.5மிமீ ஹெட்ஜாக் இடம்பெறவில்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A1 Successor On the Way Along With a Budget Android One Redmi Device. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X