Home
Mobile

நீ ஒன்னும் சொல்ல வேணாம், காசு வாங்கிக்கோ - சியோமி மி ஏ1 ஒன்னு கொடு.!

சியோமி மி ஏ1 என்பது ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும்.

By Muthuraj

சியோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் ஆன சியோமி மி ஏ1 ஆனது இன்று முதல் அதன் இந்திய விற்பனையை தொடங்கியுள்ளது. ப்ளிப்கார்ட் மற்றும் மி.காம் தளங்களில் மற்றும் சங்கீதா, பூரிவ்கா, பிக்

நீ ஒன்னும் சொல்ல வேணாம், காசு வாங்கிக்கோ - சியோமி மி ஏ1 ஒன்னு கொடு.!

கடந்த வாரம் புது டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் ஆனது சியோமி மி5 எக்ஸ் ஸ்மார்ட்போனின் மற்றொரு மாறுபாடாகும். இக்கருவியின் இந்திய விலை நிர்ணயம் மற்றும் இதன் அம்சங்கள் என்னென்ன.?

கூகுள் மூலம் சான்றளிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

கூகுள் மூலம் சான்றளிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

சியோமி மி ஏ1 என்பது ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். அதாவது, செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்காக கூகுள் மூலம் சான்றளிக்கப்பட்ட மற்றும் சரியான நேரத்தில் ஆண்ட்ராய்டு பதிப்பு புதுப்பிப்புகளை உறுதி செய்யும் ஒரு ஸ்மார்ட்போனாகும்.

மி கேமரா, மி ரிமோட் மற்றும் மி ஸ்டோர்

மி கேமரா, மி ரிமோட் மற்றும் மி ஸ்டோர்

மி ஏ1 அமைப்புகளில் (செட்டிங்ஸ்) உள்ள சேவைகள் பிரிவைத் தவிர்த்து, மி கேமரா, மி ரிமோட் மற்றும் மி ஸ்டோர் போன்ற பயன்பாடுகள் "கவனமாக கையாளப்பட்ட ப்ரீஇன்ஸ்டால்ட்டு ஆப்ஸ்"களாக வருகிறது. உடன் இக்கருவியில் கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் கூகுள் போட்டோஸ் ஆதரவும் கிடைக்கும்.

இரட்டை சிம் (நானோ சிம்) ஆதரவு

இரட்டை சிம் (நானோ சிம்) ஆதரவு

மற்ற அம்சங்களி பொறுத்தமட்டில், இக்கருவி ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு, 2.5டி வளைந்த கண்ணாடி, மற்றும் பின்புறத்தில் ஒரு கைரேகை சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இரட்டை சிம் (நானோ சிம்) ஆதரவு கொண்ட சியோமி மி ஏ1 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.2 கொண்டு இயங்கும்.

கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

இது கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்ட 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. இது ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 எ0ஸ்ஓசி மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு 12 எம்பி சென்சார்

இரண்டு 12 எம்பி சென்சார்

இதன் இரட்டை பின்புற கேமரா அமைப்பை பொறுத்தமட்டில், இதன் இரண்டு 12 எம்பி சென்சார்களில் ஒன்று - 1.25 மைக்ரான் பிக்சல் சென்சார் மற்றும் எப் / 2.2 துளை மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகிய அம்சங்களையும் மற்றொன்று ஒரு மைக்ரான் பிக்சல் சென்சார், ஒரு எப் / 2.6 துளை மற்றும் 2X ஆப்டிகல் ஜூம் ஆகிய அம்சங்களும் கொண்டுள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில், ரியல் டைம் பியூட்டிப்பை மோட் கொண்ட ஒரு 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட இக்கருவி 64ஜிபி என்ற உள்ளடக்கிய சேமிப்பை கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவைகளை வழங்குகிறது.

சென்சார்

சென்சார்

உடன் அக்ஸலரேமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கைராஸ்க்கோப், இன்ஃப்ராரெட், மேக்னோமீட்டர், பிராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்ட இக்கருவி 3080எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது. அளவீட்டில் 155.4x75.8x7.3 மிமீ மற்றும் 168 கிராம் எடையுள்ளதாக உள்ளது.

விலைநிர்ணயம்

விலைநிர்ணயம்

இந்தியாவில், சியோமி மி ஏ1 ஆனது ரூ.14,999/- என்ற விலைநிர்ணயத்தின் கீழ் கருப்பு மற்றும் தங்கம் என்ற இரண்டு வண்ண விருப்பங்கள் வருகிறது. உடன் இக்கருவியை வாங்குவதின் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் 300 ஜிபி அளவிலான கூடுதல் 4ஜி டேட்டா திட்டங்களையும் அணுகலாம். 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட சிங்கிள் வேரியண்ட் ஆக இக்கருவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A1 Shut up and take my money. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X