விவோ நிறுவனத்திற்கு போட்டியாக மூன்று கேமராக்களுடன் சியோமி மி 9 அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

|

இந்திய சந்தையில் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடரந்து, சியோமி நிறுவனம் சீனாவில் சியோமி மி 9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு சியோமி மி 9 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தiயில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விவோ நிறுவனத்திற்கு போட்டியாக மூன்று கேமராக்களுடன் சியோமி மி9 அறிமுகம்

மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோன்று இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் சாம்பல், நீலம் மற்றும் பர்பிள்
நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி மி 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.39-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு கார்னிங் கொரில்லா கிளாஷ் 6 பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பளே இருப்பதால் பார்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சிப்செட்

சிப்செட்

இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் ஆதரவு இவற்றில் உள்ளதால் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி primary camera + 16எம்பி wide-angle lens + 12எம்பி
telephoto sensor கொண்ட கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு கூட இந்த ஸ்மார்ட்போனை அருமையாக பயன்படுத்த முடியும்.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

சியோமி மி 9 ஸ்மார்ட்போனில் 3,300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, யுஎஸ்பி, என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

இந்திய விலையில்....
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரேம் கொண்ட சியோமி மி 9 விலை ரூ.32,000-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரேம் கொண்ட சியோமி மி 9 விலை ரூ.35,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 9 with 48MP camera officially launched for Rs. 32,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X