செப்டம்பர் 16: அசத்தலான மி 9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

செய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

சியோமி நிறுவனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி தனது மி 9 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி 9 லைட்

சியோமி மி 9 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.39-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு அட்ரினோ 616ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பாகிஸ்தானை கதிகலங்க வைத்த ஏவுகணை சோதனை.!

 32எம்பி செல்பீ கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைம் கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

உள்ளடக்க மெமரி

சியோமி மி 9 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வைரல்: தகனம் செய்தபின் மீண்டும் உயிருடன் வந்து ஷாக் கொடுத்த நபர்!

4030எம்ஏஎச் பேட்டரி

சியோமி மி 9 லைட் சாதனத்தில் 4030எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்;; வைஃபை, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Mi 9 Lite to launch on September 16 and more details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more