செப்டம்பர் 16: அசத்தலான மி 9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சியோமி நிறுவனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி தனது மி 9 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி 9 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.39-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன்வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு அட்ரினோ 616ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைம் கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கைநுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

சியோமி மி 9 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி மி 9 லைட் சாதனத்தில் 4030எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்;; வைஃபை, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications