Home
Mobile

மூன்று ரியர் கேமராவுடன் மிரட்டலான சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போன் மாடலை ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மூன்று ரியர் கேமரா, வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு விரைவில் இந்த சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.39-இன்ச் AMOLEDஎப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி:

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா அமைப்பு

சியோமி மி9 லைட் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த்சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்;றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 அருமையான சிப்செட் வசதி

சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு அட்ரினோ 616ஜிபியு வசதி, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் போன்ற சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18வாட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

அட்டகாசமான விலை

இந்திய மதிப்பில்...
4ஜிபி ரேம் கொண்ட சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,200-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் கொண்ட சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,560-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 9 Lite launched with triple rear cameras : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X