புதிய சியோமி மி 8 யூத் அறிமுக தேதி.! விலை மற்றும் விபரக்குறிப்பு.!

|

சியோமி நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் போன்ற்கான அறிமுக வீடியோ டீஸர்களை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த விடியோவின் படி சியோமி நிறுவனம் அடுத்து வெளியிடப் போவது சியோமி மி 8 யூத் மாடல் ஸ்மார்ட்போன் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 சியோமி மி 8 யூத்

சியோமி மி 8 யூத்

இந்த வீடியோ டீசரில் சியோமி மி 8 யூத் இன் டூயல் கேமரா மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் பொறுத்த பட்ட கிளாஸ் பேக் பேணல் விபரங்கள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் சியோமி மி 8 யூத் இன் அறிமுக தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அறிமுக தேதி

அறிமுக தேதி

டீசர்களில் வெளியாகி இருக்கும் தகவல்கள் படி மி 8 யூத் எடிஷன் மாடல் ப்ளு, பர்ப்பிள் மற்றும் ட்விலைட் கோல்டு கிரேடியன்ட் நிறங்களில் விரைவில் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. டீஸர் விபரப்படி வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி புதிய சியோமி மி 8 யூத் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி மி 8 யூத் இன் அறிமுக விழா சீனாவில் உள்ள செங்டுவில் நடைபெறப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி 8 யூத் இல் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

சியோமி மி 8 யூத் இல் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் எச்.டி. பிளஸ் 19:9 2.5டி கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே

- ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 710 10nm சிப்செட்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 24 எம்.பி. செல்பி கேமரா
- ஃபாஸ்ட் சார்ஜிங்
- 3250 எம்ஏஎச் பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைப்பை
- ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி

 விலை

விலை

சியோமி மி 8 யூத் ஸ்மார்ட்போன் இன் துவக்க வேரியண்ட் இன் விலை ரூ.21,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய சியோமி மி 8 யூத் பிளாக், ரோஸ் கோல்டு, கோல்டு, வைட், ப்ளூ, ரெட், கிரே, சில்வர், கிரீன், வைலட் கிரேடியன்ட், பர்ப்பிள்-கோல்டு கிரேடியன்ட் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 8 Youth Teaser Videos Show Design Ahead of September 19 Launch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X