ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி 8 யூத்.!
சியோமி மி 8 யூத் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும், அந்தவகையில் போகோ எப்1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது, மேலும்
சியோமி நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் சியோமி மி 8 யூத் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக சியோமி மி 8 யூத் ஸ்மார்ட்போன் மாடல் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியா சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் விற்பனைக்குவரும்
என்று சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி 8 யூத்:
சியோமி மி 8 யூத் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.26-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 x 2280 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கேமரா:
சியோமி மி 8 யூத் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
சியோமி மி 8 யூத் ஸ்மார்ட்போனில் 3350எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications