பட்ஜெட் விலையில் வெளிவரும் சியோமி மி 8 எஸ்இ.!
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6 ஜிபிரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, சியோமி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பேஸ் அன்லாக் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி நிறுவனம் தான் முதல் இடத்தில் உள்ளது. மேலும் சியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி:
சியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.88-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், அதன்பின்பு 2244x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 710:
இந்த சியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6 ஜிபிரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
சியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போனில் 12எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் கருப்பு, நீலம், தங்கம், சிவப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.


விலை:
சியோமி மி 8 எஸ்இ ஸ்மார்ட்போனில் 3120எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸமார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.18,000-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications