விரைவில்: 6ஜிபி ரேம் & 128ஜிபி மெமரியுடன் வெளிவரும் சியோமி மி 8 எஸ்இ.!

சியோமி நிறுவனத்தின் முதல் மி 8 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் மே மதம் வெளிவந்தது.

By Sharath
|
விரைவில்: 6ஜிபி ரேம் & 128ஜிபி மெமரியுடன் வெளிவரும் சியோமி மி 8 எஸ்இ.!

சியோமி நிறுவனத்தின் முதல் சியோமி மி 8 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் மே மதம் வெளிவந்தது. சியோமி மி 8 எஸ்இ 4ஜிபி ரேம் / 64ஜிபி உள் சேமிப்பு மற்றும் 6ஜிபி ரேம் / 64ஜிபி உள் சேமிப்புடன் கூடிய இரண்டு வேரியண்ட் வெளிவந்தது. தற்பொழுது சியோமி-இன் புதிய 128ஜிபி வேரியண்ட் மி ஸ்டோர்-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சியோமி மி 8 எஸ்இ விரிவாக்கத்திற்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இல்லை என்பதுடன் இந்த புதிய மி 8 எஸ்இ 6ஜிபி ரேம்/ 128ஜிபி உள் சேமிப்புடைய கோல்ட், அடர் சாம்பல், பிரைட் ரெட் மற்றும் பிரைட் ப்ளூ கலர்களின் போன் விலை ரூ 23,100-க்கு, மி ஸ்டோர்-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய  சியோமி மி 8

முந்தைய சியோமி மி 8

அத்துடன் இதன் முந்தைய 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் / 64ஜிபி உள் சேமிப்பு வேரியண்ட் மாடல் போன்களின் விலை ரூ 18,900 மற்றும் ரூ 21,100 ஆக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த புதிய சியோமி மி 8 எஸ்இ அதிகரிக்கப்பட உள்ளடக்கச் சேமிப்பு தவிர மற்ற அனைத்துக் குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு உறுப்புகள் ஒரே மாதிரியானவை தான்.

5.88 இன்ச் அமோலேட் முழு எச்டி திரை

5.88 இன்ச் அமோலேட் முழு எச்டி திரை

5.88 இன்ச் 1080x2244 பிக்சல்கள் கொண்ட அமோலேட் முழு எச்டி 2.5 டி கிளாஸ் ப்ரொடெக்ஷன் திரையுடன் வருகிறது. அட்ரீனோ 616 கிராபிக்ஸ் இனைப்புடன் 2.2 ஜிஹா ஹர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 எஸ்ஓசி மூலம் மியூய்10-ல் இயக்கப்படுகிறது.

சியோமி மி 8 எஸ்இ கேமரா

சியோமி மி 8 எஸ்இ கேமரா

சியோமி மி 8 எஸ்இ 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்ட இரண்டு பின் கேமராவுடன் 20 மெகாபிக்சல் முன் கேமராவுடன் வருகிறது. சிறந்த போக்ஹே மோட், போட்ரைட் மோட், ஸ்மார்ட் பியூட்டி, 4k வீடியோ மற்றும் ஸ்லோவ் மோஷன் ரெக்கார்டிங் போன்ற அம்சங்களுடன் வருகிறது .

நீடித்து உழைக்கும் பேட்டரி

நீடித்து உழைக்கும் பேட்டரி

நீடித்து உழைக்கும் 3120 எம்எஎச் பேட்டரியுடன் அசத்துகிறது சியோமி மி 8 எஸ்இ. 269 ​​மணி நேரம் ஸ்டான்பை, 108 மணி நேர இசை பின்னணி, 13 மணிநேர வீடியோ பின்னணி மற்றும் 7 மணி நேரத் தொடர் கேம்மிங்குடன் நிலைத்து நீடிக்கிறது இந்த பேட்டரி. அத்துடன் ப்ளூடூத் 5.0, வைஃபை 802.11, ஜிபிஎஸ், வோல்ட்டி மற்றும் யூஎஸ்பி சி வகை ஆதரவுடன் சியோமி மி 8 எஸ்இ 147.28 x 73.09 x 7.5 மிமீ அளவுடன் 164 கிராம் எடையுடைய ஸ்லிம் ஸ்மார்ட்போனாக களமிறங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 8 SE 6GB RAM, 128GB Storage Variant Launched: Price, Specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X