ஒரே நேரத்தில் வெளியான சியோமி மி 8 VS மி 8 எக்ஸ்ப்ளோரர் VS மி 8 எஸ்இ; எது பெஸ்ட்.?
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி அதன் 8-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்ச்சியில், மிகுந்த எதிர்பார்க்கப்பட்ட நிறுவனத்தின் சியோமி மி 8 ஸ்மார்ட்போன் அறிமுகமானது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி அதன் 8-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்ச்சியில், மிகுந்த எதிர்பார்க்கப்பட்ட நிறுவனத்தின் சியோமி மி 8 ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனுடன் சர்ப்ரைஸ் ஆக மி 8 எக்ஸ்ப்ளோரர் பதிப்பு மற்றும் மி 8 எஸ்இ ஆகிய ஸ்டாண்டர்ட் கி 8 ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் ஆகின.
கூடிய விரைவில் இந்திய சந்தையை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படும் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் என்ன.? என்பதை பற்றி காண்போம். குறிப்பாக பிரத்யேக நிகழ்வில் அறிமுகமான மி 8 ஸ்மார்ட்போனின் இந்த மூன்று மாறுபட்ட வகைகளுக்கிடையிலான வேறுபாடுகளை விரிவாக காண்போம்.

வடிவமைப்பு
வடிவமைப்பை பொறுத்தவரை இந்த மூன்று சாதனங்கள் ஒன்றுக்கொண்டு ஒத்துழைக்கின்றன. அவைகள் அனைத்தும் ஒரு சிறப்பான பெஸல்லெஸ் வடிவமைப்பை கொண்டுள்ளன. பின்பக்கத்தில் சில வித்தியாசங்கள் காணப்படுகிறது. மி 8 மற்றும் மி 8 எஸ்இ ஆனது ஒரு கண்ணாடி பின்னணியை கொண்டிருக்க மறுகையில் உள்ள மி 8 எக்ஸ்ப்ளோரர் பதிப்பு ஒரு வெளிப்படையான கண்ணாடி பேனலை கொண்டு வருகிறது.

டிஸ்பிளே
சியோமி மி 8 மற்றும் மி 8 எக்ஸ்ப்ளோரர் பதிப்பானது ஒரு 10.2 x 2248 தீர்மானம் மற்றும் 18.7: 9 தஜிரை விகிதத்தை வழங்கும் 6.2 அங்குல முழு எச்டி+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள மி8 எஸ்இ ஆனது 880 x 2248 தீர்மானம் மற்றும் 18.7: 9 திரை விகிதம் கொண்ட ஒரு 5.88 அங்குல முழு எச்டி+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. எல்லா ஸ்மார்ட்போன்களுமே மேலே கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன. மி 8 மற்றும் மி எஸ்இ ஸ்மார்ட்போன்கள் அதன் பின்புறத்தில் கைரேகை சென்சாரை கொண்டுள்ளன. மறுகையில் உள்ள மி 8 எக்ஸ்ப்ளோரர் பதிப்பு ஆனது டிஸ்பிளேவின் கீழே கைரேகை சென்சார் ஒன்றை கொண்டுள்ளது.

சேமிப்பு விருப்பங்கள், செயல்திறன்.!
சியோமி மி 8 எக்ஸ்ப்ளோரர் பதிப்பு மற்றும் மி 8 ஆகிய இரண்டும் உயர் இறுதியில் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 சிப்செட்டை கொண்டுள்ளன. சேமிப்பை பொறுத்தவரை, மி 8 ஆனது 6ஜிபி ரேம் கொண்டு வருகிறது மற்றும் மி 8 எக்ஸ்புளோரர் ஆனது 8 ஜிபி ரேம் கொண்டு வருகிறது. உள்ளடக்கசேமிப்புக்காக, மி 8 ஆனது 128 ஜிபி கொண்டிருக்க, மறுகையில் உள்ள மீ 8 எக்ஸ்ப்ளோரர் ஆனது 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கிய மூன்று வகைகளில் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான மியூஐ 10.!
மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆன மி 8 எஸ்இ ஆனது க்வால்காம் ஸ்னாப்தீர்க்கன் 710 செயலி கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு மாறுபாடுகளில் - 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி - வெளியாகிறது.இந்த மூன்று ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான மியூஐ 10 கொண்டு இயங்கும் மற்றும் எதிலுமே சேமிப்பு விரிவாக்க விருப்பம் கிடையாது.

பேட்டரி.!
க்வால்காம் பாஸ்ட் சார்ஜ் 4+ ஆதரவு கொண்ட ஒரு 3400mAh பேட்டரியை, மி 8 ஐ கொண்டுள்ளது. இது மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை விட அதிகமாகும். மி 8 எக்ஸ்ப்ளோரர் பதிப்பானது, க்வால்காம் பாஸ்ட் சார்ஜ் 4+ ஆதரவுடன் கூடிய 3000mAh பேட்டரி திறன் கொண்டு வருகிறது. கடைசியாக உள்ள மி 8 எஸ்இ ஆனது க்வால்காம் பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரவுடன் கூடிய 3120mAh பேட்டரியை கொண்டுள்ளது.

கேமரா.!
சியோமி மி 8 மற்றும் மி 8 எக்ஸ்ப்ளோரர் ஆனது 12 எம்பி + 12 எம்பி சென்சார்களை கொண்ட ஒரு இரட்டை கேமரா அமைப்பை பின்பக்கத்தில் கொண்டுள்ளன. அந்த அமைப்பின் முதன்மை சென்சார் ஆனது 1.4um பிக்சல் அளவு, ஃபோர் ஆக்சிஸ் ஐஓஎஸ், டூயல் பிக்சல் AF மற்றும் ஒரு எப் / 1.8 துளை ஆகியவற்றுடன் வருகிறது. இரண்டாம் நிலை சென்சார் ஆனது 1.0um பிக்சல் அளவு மற்றும் ஒரு எப் / 2.4 துளையுடன் வருகிறது. இந்த இரட்டை கேமரா அமைப்பு காரணமாக 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் போர்ட்ரேட் பயன்முறை அம்சம் சாத்தியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

AI பயன்முறை ஆதரவு.!
ஐபோன்களோடு போட்டியிடும் புகைப்படங்களை உருவாக்கும் முனைப்பின் கீழ் இந்த ஸ்மார்ட்போன்களின் கேமராக்கள் AI பயன்முறை ஆதரவு புகுத்தப்பட்டுள்ளது. சியோமி மி 8 எஸ்இ-ஐ பொறுத்தவரை, பின்புறத்தில் 12 எம்பி + 5 எம்பி சென்சார்கள் என்கிற அளவிலான இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. 12 எம்பி முதன்மை சென்சார் ஆனது EIS, இடூயல் பிக்சல் AF மற்றும் ஒரு எப் / 1.9 துளை உடன் வருகிறது.


செல்பீ கேமராக்கள்.!
மிகவும் சுவாரசியமாக இந்த மூன்று ஸ்மார்ட்போன்களிலும் 60fps 4கே வீடியோக்களை பதிவு செய்யும் திறன் உள்ளது. செல்பீக்களை பொறுத்தவரை, மூன்று ஸ்மார்ட்போன்களுமே AI பியூட்டி மற்றும் AI பெயிண்டிங்ஸ் போன்ற அம்சங்களை கொண்ட ஒரு 20எம்பி சென்சாரை கொண்டுள்ளது. அதில் மி 8 மற்றும் மி 8 எஸ்இ ஆகியவை 3D முக அங்கீகார தொழில்நுட்பத்துடன் வருகின்றன. இது பேஸ் ஐடி போன்ற முக அடையாளங்களை வழங்குவதற்காக அகச்சிவப்பு சென்சார் மற்றும் அகச்சிவப்பு லைட்ஸ்களை பயன்படுத்தும் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications