புதிய மாறுபாடுகளுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் மி 8 லைட்.!
சியோமி மி 8 லைட் ஸ்மார்ட்போன் 24 மெகா பிக்சல் முன் செல்பி கேமராவுடன் 3350 எம்.ஏ.எச் பேட்டரி உடன் வருகிறது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது, அதன்படி சியோமி மி 8 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி வித்தியசாங்களில் கிடைத்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன்
கிடைக்கிறது. மேலும் புதிய மாறுபாடுகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் ஏ.ஐ சேவை
சியோமி மி 8 லைட் ஸ்மார்ட்போன் 24 மெகா பிக்சல் முன் செல்பி கேமராவுடன் 3350 எம்.ஏ.எச் பேட்டரி உடன் வருகிறது. அதில் கூடுதல் ஏ.ஐ சேவைகளும் வழங்கப்பட்டிருப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்பொழுது சீனா சந்தையில் மட்டும் இந்த புதிய சியோமி மி 8 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி மி 8 லைட் விபரக்குறிப்பு:
- 6.26 இன்ச் ஃபுல் ஹெச்.டி. + 2280x1080 பிக்சல் கொண்ட 19:9 விகித 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
- அட்ரினோ 512 ஜிபியு
- 4 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி
- 6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி
- 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி
- 12 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார்
- 5 மெகா பிக்சல் இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் -
24 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா சோனி IMX576 சென்சார்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
- கைரேகை சென்சார் -
டூயல் சிம் ஸ்லாட்
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைப்பை
- ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- 3350 எம்.ஏ.எச். பேட்டரி
- குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

சியோமி மி 8 லைட் விலை பட்டியல்: -
-4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை: ரூ.14,833
- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை: ரூ.18,014
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை: ரூ.21,195
-4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை தெரிவிக்கப்படவில்லை.

விற்பனை
விரைவில் இந்திய சந்தையிலும் இந்த புதிய சியோமி மி 8 லைட் ஸ்மார்ட்போன் இன் துவங்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் மி ஸ்டோர் தலத்தில் இந்த மாத இறுதியில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications