பேஸ் அன்லாக் உடன் சியோமி மி 8; மிரண்டு போனது ஆப்பிள்.!

இறுதியாக மே 31-ஆம் தேதி அன்று, சியோமி நிறுவனம் அதன் எட்டாம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது, மி 8 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்கிற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

|

இறுதியாக மே 31-ஆம் தேதி அன்று, சியோமி நிறுவனம் அதன் எட்டாம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது, மி 8 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்கிற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சியோமி 7 என்ற பெயரில் வெளியாக இருந்த ஸ்மார்ட்போன் ஆனது எட்டாம் ஆண்டை குறிக்கும் வண்ணம், சியோமி மி 8 என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பேஸ் அன்லாக் உடன் சியோமி மி 8; மிரண்டு போனது ஆப்பிள்.!

மொத்தம் இரண்டு மாடல்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சியோமி மி 8 ஆனது, சீனாவின் 3C சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டது போன்றே, அமெரிக்காவின் FCC தளத்திலும் காணப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் மாடல் எண்கள் தவிர, ஸ்மார்ட்போன்களைப் பற்றிய எந்த விவரங்களையும், சான்றிதழ் தளங்கள் பட்டியலிடவில்லை.

வெளியான மாடல் எண்களை வைத்து பார்க்கும் போது (மாடல் எண் M1805E2A மற்றும் மாடல் எண் M1803E1A), இரண்டு மாடலாகளுமே MDY-08-ES இஎஸ் பவர் அடாப்டர் மற்றும் 5V3A / 9V2A / 12V1.5A உடனான 20W சார்ஜிங் அவுட்புட்டை கொண்டு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

போதுமான அளவில் சூப்பர் பட்ஜெட், பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்ட சியோமி நிறுவனம், மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்களை சந்தையில் களமிறக்கி வருகிறது. அந்த வரிசையின் கீழ் தான் சியோமி 8 ஸ்மார்ட்போனும் வெளியாகும்

முன்னதாக வெளியான லீக்ஸ் தகவலின் படி (விபோ தளம் வழியாக), மி 8 ஆனது அண்டர்-டிஸ்பிளே கைரேகை சென்சாரை கொண்டிருக்கும். வெளியானது மிகவும் குறுகிய லீக்ஸ் வீடியோவில் காட்சிப்படும் மி 8 ஆனது மிகவும் கடினமானதாக உள்ளது. உடன் ஹோம் ஸ்க்ரீனை பார்க்கும் போது, மி 8 ஆனது நிறுவனத்தின் மியூஐ 9-ஐ கொண்டு இயங்கும் என்றே தோண்றுகிறது. உட்பொதிக்கப்பட்டுள்ள கைரேகை சென்சார் ஆனது, பயனரின் கட்டைவிரலை ரீட் செய்யும் மற்றும் அது டிஸ்பிளேவின் குறிப்பிட்ட பகுதியின் கீழ் பொருத்தப்பட்டிருக்கும். அதை காட்சிப்படுத்தும் வண்ணம் அந்த இடம் ஒளிரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேஸ் அன்லாக் உடன் சியோமி மி 8; மிரண்டு போனது ஆப்பிள்.!

மேலும் இந்த சியோமி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது, ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஐபோன் எக்ஸ்-ல் இடம்பெற்றுள்ள 3டி பேஷியல் ரிக்ககனைசேஷன் அம்சத்தினை கொண்டுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன், மி 8 ஸ்மார்ட்போனில், இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த செயல்முறையானது மிகவும் பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும்என்பதால், 2டி படத்திற்குப் பதிலாக பயனர் முகத்தின் ஒரு 3டி வரைபடத்தை இந்த தொழில்நுட்ப்பம் உருவாக்கும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

நிறுவனத்தின் 8-வது ஆண்டு பதிப்பு என்பதால், இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சிறப்பான அம்சங்களை பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம். குறிப்பாக க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 SoC பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒரு OLED டிஸ்பிளே இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான பிற விவரங்கள் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. வந்ததும் அதை உடனுக்குடன் அறிந்து கொள்ள, தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 8 Confirmed to Launch on May 31. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X