மிகவும் எதிர்பார்த்த சியோமி மி 7 வெளீயிட்டு தேதி அறிவிப்பு.!
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து இந்தியா மற்றும் சீனாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் மே 23-ம் தேதி சியோமி நிறுவனத்தின் 8-வது ஆண்டுவிழா முன்னிட்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றம் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.6-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440 x 2880 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோகேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 4480எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications