சியோமி மி7-ல் இடம்பெறும் கனவு அம்சம்; என்னவென்று சொல்லுங்க பார்ப்போம்.!
எனவே மி 7 கருவியில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டு வர எந்தவொரு தரம் சார்ந்த சிக்கல் அல்லது விநியோக பற்றாக்குறையை நிறுவனம் எதிர்கொள்ளாது என்பது உறுதியாகிறது.
சமீபத்தில், சியோமி மி 7 என்று கூறப்படும் ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயமானது ஒரு சீன வலைத்தளம் (நியூஸ்டிரைவர்) மூலம் கசிந்தது. இப்போது கிஸ்மோசீனாவின் வழியாக அதே சியோமி மி7 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தகவலின்படி, சியோமி மி7 ஆனது வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கொண்டிருக்கும் மற்றும் அதன் சோதனை தயாரிபானது சீனாவின் ஸ்பிரிண்ட் ஃபெஸ்டிவலில் தொடங்கப்படுமென அறிக்கை கூறுகிறது. எனவே மி 7 கருவியில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டு வர எந்தவொரு தரம் சார்ந்த சிக்கல் அல்லது விநியோக பற்றாக்குறையை நிறுவனம் எதிர்கொள்ளாது என்பது உறுதியாகிறது.

2017 ஐபோன்களில் அதே பிராட்காம் சிப்
மேலும் கூறப்படும் மி 7 கருவியானது, ஆப்பிள் 2017 ஐபோன்களில் இடம்பெற்றுள்ள அதே பிராட்காம் சிப் மற்றும் என்எக்ஸ்பி டிரான்ஸ்மிட்டரைக் கொண்டிருக்குமென்றும் அறிக்கை நீள்கிறது. முன்னர் வெளியான தகவலின்படி, சியோமி மி 7 ஆனது வயர்லெஸ் பவர் கூட்டமைப்பு உறுப்பினர் பட்டியலின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் காணப்பட்டது. அதன் முதலே மி 7 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜ் அம்சத்தின் ஆதரவு சமிக்ஞை ஆரம்பமாகியது.

பின்புறம் ஒரு கண்ணாடி வடிவமைப்பு
நிறுவனத்தின் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன் ஆன சியோமி மி 7 ஆனது வயர்லெஸ் சார்ஜ் வசதியுடன் வரும் முதல் சியோமி கருவியாகும். வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இடம்பெறுவதால் இக்கருவியின் பின்புறம் ஒரு கண்ணாடி வடிவமைப்பை பெறலாம்.

வயர்லெஸ் பவர் கூட்டமைப்பு
இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்வின் பொது அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயர்லெஸ் பவர் கூட்டமைப்பு (WPC) கடந்த 2008-ல் உருவாக்கப்பட்டது மற்றும் ஆப்பிள், சாம்சங், எல்ஜி, சோனி மற்றும் பல பிராண்டுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன, இப்பொது அந்த பட்டியலில் சியோமியின் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

6.01 அங்குல ஓல்இடி டிஸ்ப்ளே
முந்தைய கசிவுகள் படி கூறப்படும் சியோமி மி7 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில்,இது ஒரு முழு திரை வடிவமைப்பை பெறலாம். அதாவது 18: 9 என்கிற என்ற விகிதத்துடன் ஒரு 6.01 அங்குல ஓல்இடி டிஸ்ப்ளே இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 845 செயலி
தவிர, மி 7 ஆனது ஸ்னாப்டிராகன் 845 செயலி உடனான 6ஜிபி ரேம் உடன் இணைந்து இயக்கப்படலாம். மேலும், இந்த புதிய சிப்செட் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அதன் உற்பத்தி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கைரேகை சென்சார்
பின்புறத்தில் ஒரு கைரேகை சென்சார் இடம்பெறலாம். கேமராத்துறையை பொறுத்தமட்டில், இது எப்/1.7 துளை உடனான 16எம்பி+ 16எம்பி என்கிற சென்சார் கலவையிலான இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டிருக்கலாம்.

விலை நிர்ணயம்
இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டிருக்குமென்றும், மொத்தம் இரண்டு வகைகளில் - அதாவது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் - வெளியாகுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் 6ஜிபி மாறுபாடானது சுமார் 2,999 யுவான் அதாவது சுமார் ரூ.29,369/- என்கிற விலைப்புள்ளியை எட்டலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications