7.5-வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் சியோமி மி 7.!
சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 7.5-வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றுள்ளது. இந்த 7.5-வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு ஏற்கனவே ஐபோன் எக்ஸ், 8, 8பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இணையத்தில் சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கசிந்துள்ளது.

சியோமி மி 7 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு டூயல் ரியர் கேமரா வசதி செயற்கை நுண்ணரிவு அம்சங்கள் போன்ற அனைத்து இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி 7 :
சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.6-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440 x 2880 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த சியோமி மி 7 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/129ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


4480எம்ஏஎச்:
சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 4480எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்போனின் விலைமதிப்பு ரூ.29,800-வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications