Home
Mobile

சாம்சங்; ஆப்பிள்; சோனி ஸ்மார்ட்போன்களை 'காலி செய்யும்" சியோமி மி 7.!

ஒரு சீன வலைத்தளத்தின் படி, சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் ஆகிய விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

By Muthuraj

சியோமி நிறுவனத்தின் மி 7 ஸ்மார்ட்போன் பற்றிய பல அறிக்கைகள் வெளியாகியுள்ள நிலைப்பாட்டில் இக்கருவி வருகிற பிப்ரவரியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சீன வலைத்தளத்தின் படி, சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் ஆகிய விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

சாம்சங்; ஆப்பிள்; சோனி ஸ்மார்ட்போன்களை 'காலி செய்யும்

சியோமி மி 6 ஆனது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டது ஆகையால் வருகிற பிப்ரவரி மாதத்தில் பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (எம்டபுள்யூசி) நிகழ்வின் போது, சியோமி மி 7 ஸ்மார்ட்போன் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மி 5 ஸ்மார்ட்போன் எப்படி அறிமுகமானதோ அதேபாணியில் மி 7 கருவியும் அறிமுகப்படுத்தப்படலாம்.

18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளே

18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளே

தற்போது வெளியாகியுள்ள புதிய கசிவின் படி, சியோமி மி 7 ஆனது, தற்கால ஸ்மார்ட்போன் வடிவமைபின் பிரபலாமா பாணியில் அதாவது ஒரு முழு திரை வடிவமைப்பு கொண்ட சாதனமாக வெளியாகலாம். இது ஒரு 6.01 அங்குல ஓல்இடி அளவிலான, 18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளே கொண்டிருக்கலாம்.

ஸ்னாப்டிராகன் 845 செயலி

ஸ்னாப்டிராகன் 845 செயலி

மேலும் மி 7 ஆனது ஸ்னாப்டிராகன் 845 செயலி உடனான 6ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படலாம். இந்த புதிய சிப்செட் ஆனது, அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் உற்பத்தி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பே துவங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

16எம்பி + 16எம்பி சென்சார்

16எம்பி + 16எம்பி சென்சார்

இந்த சமீபத்திய மி 7 கசிவிலும் ஒரு கைரேகை சென்சார் இடம்பெறும் என்பது வலியுறுத்தபப்டுகிறது. இதன் கேமிரா துறையை பொறுத்தமட்டில், எப்/1.7 துளையுடனான 16எம்பி + 16எம்பி சென்சார் என்கிற இரட்டை பின்புற கேமராக்கள் அம்சம் இடம்பெறலாமென கூறப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜ் ஆதரவை கொண்டிருக்கும் என்றும் வதந்திகள் தெரிவிக்கினறன.

சுமார் 2699 யுவான் என்கிற ஆரம்ப விலைப்புள்ளி

சுமார் 2699 யுவான் என்கிற ஆரம்ப விலைப்புள்ளி

லீக்ஸ் தகவலில் வெளிப்பட்டுள்ள விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், சியோமி மி 7 ஸ்மார்ட்போன் ஆனது சுமார் 2699 யுவான் என்கிற ஆரம்ப விலைப்புள்ளியை பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் வெளியான லீக்ஸ் தகவலின்படி, சியோமி மி 7 சாதனத்தில் புதிய வயர்லெஸ் சார்ஜ் வசதி இடம்பெறலாம். அப்படியானால் இந்த அம்சம் பெறும் முதல் சியோமி ஸ்மார்ட்போனாக அது திகழும்.

பின்புற கண்ணாடி வடிவமைப்பு

பின்புற கண்ணாடி வடிவமைப்பு

மி 7 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் முன்னிலை பெறும் பட்சத்தில் அக்கருவிஅநேகமாக பின்புற கண்ணாடி வடிவமைப்பும் பெறும் என்று அர்த்தம். இந்த மி 7, அடுத்த 2018-ஆம் ஆண்டின் காலிறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 கொண்டு இயங்கலாம், 6 அங்குல ஓல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எல்ஜி ஜி 7

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எல்ஜி ஜி 7

2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படும் சியோமி மி 7, அதே காலப்பகுதியில் அறிவிக்கப்படும் ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எல்ஜி ஜி 7 ஆகியவைகளுக்கு காடுபோட்டியாக அமையலாம்.

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்

மேலும் வெளியான லீக்ஸ் தகவலின் கீழ், மி 7 ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் - என்ற இரண்டு வகைகளில் அறிமுகமாகலாம் மற்றும் இந்த சாதனம் மி 6 போன்ற இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

அதாவது ஒரு பரந்த கோணம் லென்ஸ் மற்றும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்க வேண்டும். மேலும் கூறப்படும் இந்த மி 7 ஆனது கண்ணாடி மற்றும் பீங்கான் உடல் வடிவமைப்பு கொண்ட ஒரு புஃல் ஸ்க்ரீன் டிஸ்பிளே மற்றும் திரையில் கைரேகை சென்சார் ஒன்றும் இணைக்கப்பெற்று வெளியாகலாம்.

ஆப்பிள், சாம்சங், எல்ஜி, சோனி

ஆப்பிள், சாம்சங், எல்ஜி, சோனி

வயர்லெஸ் பவர் கூட்டமைப்பானது (WPC) 2008-இல் உருவாக்கப்பட்டது மற்றும் ஆப்பிள், சாம்சங், எல்ஜி, சோனி மற்றும் பல போன்ற பிராண்டுகள் இதில் உறுப்பினர்கள் உள்ளன. சமீப காலமாக முதன்மை ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் என்பது ஒரு நிலையான அம்சமாக உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில், வயர்லெஸ் பவர் கூட்டமைப்புபுடன் இணைந்த ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் போன்ற சாதனங்களில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

கண்ணாடி வடிவமைப்பு

கண்ணாடி வடிவமைப்பு

இந்த வயர்லெஸ் சார்ஜ் செயல்திறனுக்கு ஒத்துழைப்பி கொடுக்கும் வண்ணம் இந்த மூன்று ஐபோன்களின் பின்புறமும் கண்ணாடி வடிவமைப்பு கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மட்டுமின்றி, சமீபத்திய சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜ் அம்சத்தை அனுமதிக்கும் கண்ணாடி வடிவமைப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 7 specifications and pricing details leaked. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X