விரைவில் சியோமி மி 7 : எப்போது.? என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும்.?

மி7 ஸ்மார்ட்போன் சார்ந்த இந்த புதிய அறிக்கையானது, க்வால்காம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை சிப்செட் தொகுப்பைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

|

சமீபத்தில் வெளியான சியோமி நிறுவனத்தின் மி6 ஸ்மார்ட்போன் கூட 4 மாதங்கள் பழைய கருவியாகி விட்டது அல்லவா.?? என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது தற்போது வெளியாகியுள்ள தகவல். அதாவது, சியோமி நிறுவனத்தின் அடுத்த தலைமை சாதனம் சார்ந்த தகவல் வெளியாகிவிட்டது. ஆம், மி6 சாதனத்தின் அடுத்த அப்டேட் வெர்ஷன் ஆன மி7 சார்ந்த முதல் லீக்ஸ் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேராக சீனாவில் இருந்து வெளியாகியுள்ள மி7 ஸ்மார்ட்போன் சார்ந்த இந்த புதிய அறிக்கையானது, க்வால்காம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை சிப்செட் தொகுப்பைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

ஒரு பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும்

ஒரு பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும்

மேலும் சியோமி மி7 ஸ்மார்ட்போன் ஆனது இதுவரை வெளியான முதன்மை சியோமி ஸ்மார்ட்போன்களில் காணப்படாத அளவில் ஒரு பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் வெளியான அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளடது. சுவாரசியம் என்னவென்றால் சியோமி மி7 ஸ்மார்ட்போனின் தற்காலிக வெளியீட்டு தேதியும் கசிந்துள்ளது.

2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்

2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்

விபோ டிப்ஸ்டர் மூலம் வெளியான தகவலின்கீழ், கூறப்படும் சியோமி மி7 ஆனது 2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (அதாவது, மி6 ஆனது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியானது போல) வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

சியோமி நிறுவனத்தின் பிரதான ஸ்மார்ட்போன்களில் உள்ள வழக்கமாக ஹை-எண்ட் அம்சங்கள் மி7 சாதனத்தில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் பட்சத்தில், அதனை உறுதி செய்யும் வண்ணம் விபோ வெளியிட்டுள்ள தகவலில் இக்கருவி ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்குமென குறிப்பிடுகிறது.

6 அங்குல முழு எச்டி அமோஎல்இடி டிஸ்பிளே டிஸ்பிளே

6 அங்குல முழு எச்டி அமோஎல்இடி டிஸ்பிளே டிஸ்பிளே

கூடுதலாக, விபோ வெளியிட்டுள்ள தகவலின் கீழ், மி 7 ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் நிறுவனத்தின் 6 அங்குல முழு எச்டி அமோஎல்இடி டிஸ்பிளே டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறுகிறது, ஆக இக்கருவி அதன் முன்னோடிகளை ஒப்பிடுகையில் மிகவும் பெரியதாக இருக்கும் என்பது வெளிப்படை.

அதிகாரப்பூர்வமான செய்திகள் நமக்காக காத்திருக்கின்றன

அதிகாரப்பூர்வமான செய்திகள் நமக்காக காத்திருக்கின்றன

நினைவுபடுத்தும் வண்ணம், மி 6 ஆனது 5.15 அங்குல முழு எச்டி எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. அடுத்த வருடம் வெளியாகும் மி 7 சார்ந்த இந்த முதல் லீக்ஸ் தகவலின் கீழ் நாம் பெற்ற விவரங்களை கனமானதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதுபோன்று மேலும் பல லீக்ஸ் மற்றும் அதிகாரப்பூர்வமான செய்திகள் நமக்காக காத்திருக்கின்றன என்பதையும் மறவவேண்டாம்.

93 சதவிகித ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்

93 சதவிகித ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்

மி7 தவிர்த்து, சியோமி நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் சாதனமாக சியோமி மி மிக்ஸ் திகழ்கிறது. வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவி 93 சதவிகித ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் கொண்ட ஒரு சுவாரசியமான பெஸல்-லெஸ் டிஸ்பிளே ஸ்மார்ட்போனாக அறிமுகமாகலாம்.

Best Mobiles in India

English summary
It is also expected to sport a 6-inch AMOLED display.Xiaomi Mi 7 Said to Sport Snapdragon 845 SoC, Launch in Q1 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X