சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள்.!
மேலும் வெளியான லீக்ஸ் தகவலின் கீழ், மி 7 ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் - என்ற இரண்டு வகைகளில் அறிமுகமாகலாம்.
சியோமி நிறுவனத்தின் சியோமி மி 7 சாதனத்தின் விலை மற்றும் அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை அறிவிக்கப்பட்ட எந்த சியோமி ஸ்மார்ட்போன்களிலும் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு இடம்பெறவில்லை. ஆனால், விரைவில் இடம்பெறலாம் என்பதுபோல் தெரிகிறது. வயர்லெஸ் பவர் கூட்டமைப்புடன் (WPC) சியோமி நிறுவனம் கூட்டணி வைத்துக்கொண்டதில் இருந்து அதன் அடுத்த தலைமை ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு சாத்தியமாகும் என்பது போல் தெரிகிறது.

மி 7
ஆக, சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன் ஆன சியோமி மி 7 சாதனத்தில் புதிய வயர்லெஸ் சார்ஜ் வசதி இடம்பெறலாம். அப்படியானால் இந்த அம்சம் பெறும் முதல் சியோமி ஸ்மார்ட்போனாக அது திகழும்.

பின்புற கண்ணாடி வடிவமைப்பு
மி 7 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் முன்னிலை பெறும் பட்சத்தில் அக்கருவிஅநேகமாக பின்புற கண்ணாடி வடிவமைப்பும் பெறும் என்று அர்த்தம். இந்த மி 7, அடுத்த 2018-ஆம் ஆண்டின் காலிறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845
சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 கொண்டு இயங்கலாம், 6 அங்குல ஓல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம்.

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்
மேலும் வெளியான லீக்ஸ் தகவலின் கீழ், மி 7 ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் - என்ற இரண்டு வகைகளில் அறிமுகமாகலாம் மற்றும் இந்த சாதனம் மி 6 போன்ற இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு:
அதாவது ஒரு பரந்த கோணம் லென்ஸ் மற்றும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்க வேண்டும். மேலும் கூறப்படும் இந்த மி 7 ஆனது கண்ணாடி மற்றும் பீங்கான் உடல் வடிவமைப்பு கொண்ட ஒரு புஃல் ஸ்க்ரீன் டிஸ்பிளே மற்றும் திரையில் கைரேகை சென்சார் ஒன்றும் இணைக்கப்பெற்று வெளியாகலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எல்ஜி ஜி 7 :
2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படும் சியோமி மி 7, அதே காலப்பகுதியில் அறிவிக்கப்படும் ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எல்ஜி ஜி 7 ஆகியவைகளுக்கு காடுபோட்டியாக அமையலாம்.

விலை:
எல்ஜி ஜி 7 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.30,202-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications