விரைவில் வெளிவரும் சியோமி மி 7 & மி 7 பிளஸ்.!
சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
சியோமி மி 7 மற்றும் மி 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்தவருடம் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்கள்.
சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய ரியர் கேமரா 19மெகாபிக்சல் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

டிஸ்பிளே :
சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845:
சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டுஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

19எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 19எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3950எம்ஏஎச்:
சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 3950எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications