விரைவில் : ஃபேஸ் அன்லாக் வசதியுடன் வெளிவரும் சியோமி மி 7.!
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அம்சத்தைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் உலக காங்கிரஸ் ஆறுஊ (2018)-நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவத்துள்ளது. இந்நிகழ்ச்சியில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் சியோமி மி 7 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு
தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனரை மாற்றியமைக்கும் வகையில் ஃபேஸ் ஐடி போன்ற ஒரு 3டி முக அங்கீகார அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்சமயம்ட ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்த ஃபேஸ் ஐடி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 845:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அம்சத்தைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

செயற்கை நுண்ணறிவு:
மக்கள் அதிகம் விரும்பும் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், அதன்பின்பு டூயல் கேமரா வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6-இன்ச் டிஸ்பிளே:
சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்க்பட்டுள்ளது, மேலும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.


6ஜிபி ரேம் :
இக்கருவியில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

3350எம்ஏஎச்
சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 3350எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications