ஆப்பிள் எக்ஸ்-ஐ தூக்கி சாப்பிடும் பெஸல்லெஸ் வடிவைப்பு; அசத்தும் சியோமி மி7.!
உடன் மி 7 அதன் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டுவரவும் அதிக வாய்ப்புள்ளது.
சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் நாளை வெளியாகும் நிலைப்பாட்டில், இன்று மற்றொரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன சியோமி மி7 ஸ்மார்ட்போனின் லீக்ஸ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வெளியான புகைப்படத்தில் காணப்படும் மி7 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு முழுமையான பெஸல்லெஸ் வடிவமைப்பை கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் சமீபத்தில் வெளியான ஐபோன் எக்ஸ்ன் வடிவமைப்பை அப்பட்டமாக காப்பி அடித்துள்ளது.
வெளியான புகைப்படத்தில் மி7 கொண்டுள்ள அம்சங்கள் பற்றிய வார்த்தைகள் இல்லை என்றாலும் கூட , இந்த ஸ்மார்ட்போன் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 சிப்செட் மூலம் இயக்கப்படுமென பரவலாக ஊகிக்கப்படுகிறது. உடன் மி 7 அதன் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டுவரவும் அதிக வாய்ப்புள்ளது.
புகைப்படத்தில் காணப்படும் சியோமி மி 7 ஆனது சமீபத்திய வெளியீடான விவோ எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை போன்றே காட்சியளிக்கிறது. அதாவது ஒரு மிக மெல்லிய பெஸல்லெஸ் வடிவமைப்பி, 2.5டி கண்ணாடி பாதுகாப்பு மற்றும் ஒரு கேமரா, ஒரு இயர்பீஸ், ஒரு பிராக்சிமீட்டி சென்சார் ஆகியவைகளை அதன் முன்பக்கத்தில் கொண்டுள்ளது அளவீட்டை பொறுத்தமட்டில், சியோமி மி7 ஆனது விவோ எக்ஸ்21-ஐ விட விட பெரிய ஸ்கிரீன்-டூ-பாடி விகிதம் (தோராயமாக 85.2%) கொண்டுள்ளது.

உண்மையில் சியோமி மி7 தான் நிறுவனத்தின் முதல் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போனாக வெளியாகி இருக்க வேண்டும். நாளை சியோமி மி மிக்ஸ் 2எஸ் வெளியாகவுள்ளதால் இக்கருவி பின்தள்ளப்பட்டுள்ளது. ஆரம்ப அறிக்கைகளின்படி, மி7 ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 5.65 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் சுமார் 475 அமெரிக்க டாலர்கள் என்கிற புள்ளியை எட்டலாம்.


Click it and Unblock the Notifications