சியோமி மி 7-ல் உறுதி செய்யப்பட்ட ஒரு முக்கிய அம்சம்: என்னது அது?
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடலில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் அம்சம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
சியோமி மி 7 ஸ்மார்ட்போன் ஆனது 5.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 2880பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவரும்.
இக்கருவி 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டு வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 4480எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,800 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications