Home
Mobile

ஐபோன்களை ஒரு வழி செய்ய வருகிறது சியோமி மி 7 (லீக்ஸ் அம்சங்கள்).!

மி 7, அடுத்த 2018-ஆம் ஆண்டின் காலிறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Muthuraj

இதுவரை அறிவிக்கப்பட்ட எந்த சியோமி ஸ்மார்ட்போன்களிலும் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு இடம்பெறவில்லை. ஆனால், விரைவில் இடம்பெறலாம் என்பதுபோல் தெரிகிறது. வயர்லெஸ் பவர் கூட்டமைப்புடன் (WPC) சியோமி நிறுவனம் கூட்டணி வைத்துக்கொண்டதில் இருந்து அதன் அடுத்த தலைமை ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு சாத்தியமாகும் என்பது போல் தெரிகிறது.

ஐபோன்களை ஒரு வழி செய்ய வருகிறது சியோமி மி 7 (லீக்ஸ் அம்சங்கள்).!

இதை சியோமி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான லீக்ஸ் வலைதள அறிக்கையின்படி சியோமி நிறுவனம், வயர்லெஸ் பவர் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உறுப்பினர் பட்டியலில் காணப்பட்டுள்ளது.

மி 7

மி 7

ஆக, சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன் ஆன சியோமி மி 7 சாதனத்தில் புதிய வயர்லெஸ் சார்ஜ் வசதி இடம்பெறலாம். அப்படியானால் இந்த அம்சம் பெறும் முதல் சியோமி ஸ்மார்ட்போனாக அது திகழும்.

பின்புற கண்ணாடி வடிவமைப்பு

பின்புற கண்ணாடி வடிவமைப்பு

மி 7 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் முன்னிலை பெறும் பட்சத்தில் அக்கருவிஅநேகமாக பின்புற கண்ணாடி வடிவமைப்பும் பெறும் என்று அர்த்தம். இந்த மி 7, அடுத்த 2018-ஆம் ஆண்டின் காலிறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845

சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 கொண்டு இயங்கலாம், 6 அங்குல ஓல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எல்ஜி ஜி 7

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எல்ஜி ஜி 7

2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படும் சியோமி மி 7, அதே காலப்பகுதியில் அறிவிக்கப்படும் ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எல்ஜி ஜி 7 ஆகியவைகளுக்கு காடுபோட்டியாக அமையலாம்.

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்

மேலும் வெளியான லீக்ஸ் தகவலின் கீழ், மி 7 ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் - என்ற இரண்டு வகைகளில் அறிமுகமாகலாம் மற்றும் இந்த சாதனம் மி 6 போன்ற இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

அதாவது ஒரு பரந்த கோணம் லென்ஸ் மற்றும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்க வேண்டும். மேலும் கூறப்படும் இந்த மி 7 ஆனது கண்ணாடி மற்றும் பீங்கான் உடல் வடிவமைப்பு கொண்ட ஒரு புஃல் ஸ்க்ரீன் டிஸ்பிளே மற்றும் திரையில் கைரேகை சென்சார் ஒன்றும் இணைக்கப்பெற்று வெளியாகலாம்.

ஆப்பிள், சாம்சங், எல்ஜி, சோனி

ஆப்பிள், சாம்சங், எல்ஜி, சோனி

வயர்லெஸ் பவர் கூட்டமைப்பானது (WPC) 2008-இல் உருவாக்கப்பட்டது மற்றும் ஆப்பிள், சாம்சங், எல்ஜி, சோனி மற்றும் பல போன்ற பிராண்டுகள் இதில் உறுப்பினர்கள் உள்ளன. சமீப காலமாக முதன்மை ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் என்பது ஒரு நிலையான அம்சமாக உள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

இந்த ஆண்டு பிப்ரவரியில், வயர்லெஸ் பவர் கூட்டமைப்புபுடன் இணைந்த ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் போன்ற சாதனங்களில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

கண்ணாடி வடிவமைப்பு

கண்ணாடி வடிவமைப்பு

இந்த வயர்லெஸ் சார்ஜ் செயல்திறனுக்கு ஒத்துழைப்பி கொடுக்கும் வண்ணம் இந்த மூன்று ஐபோன்களின் பின்புறமும் கண்ணாடி வடிவமைப்பு கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மட்டுமின்றி, சமீபத்திய சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜ் அம்சத்தை அனுமதிக்கும் கண்ணாடி வடிவமைப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 7 to feature wireless charging support? Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X