Home
Mobile

ஒப்போ, ஒன்ப்ளஸ் உடன் சேர்த்து ஆப்பிளுக்கும் ஆப்பு வைக்கும் சியோமி மி 7.!

மி மிக்ஸ் 2எஸ் தான் இந்த ஆண்டு வெளியாகும் சியோமி நிறுவனத்தின் தலைமை ஸ்மார்ட்போன் என்கிற தகவல் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

By Muthuraj

மி மிக்ஸ் 2எஸ் தான் இந்த ஆண்டு வெளியாகும் சியோமி நிறுவனத்தின் தலைமை ஸ்மார்ட்போன் என்கிற தகவல் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், மின் மிக்ஸ் 2எஸ்-ன் அறிமுகமானது பெரிய அளவில் வெற்றி பெற்ற சியோமி மி 6 ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட பதிப்பான மி7-ஐ தடுக்கும் என்று பலர் கருதினார்கள்.

ஒப்போ, ஒன்ப்ளஸ் உடன் சேர்த்து ஆப்பிளுக்கும் ஆப்பு வைக்கும் சியோமி மி 7

இனி அம்மாதிரியான கவலைகள் வேண்டாம் என்பதை உணர்த்தும் வண்ணம் மி 7 ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், மேம்பட்ட பேஸ் ரிக்கனைசேஷன் அம்சம் மற்றும் டிஸ்பிளேவின் கீழே உட்பொதிக்கப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் என முற்றிலும் மாறுபட்ட ஒரு ஸ்மார்ட்போனாக மி7 உருவாகி வருகிறது.

'நோட்ச்' வடிவமைப்பு

'நோட்ச்' வடிவமைப்பு

ஆரம்பத்தில், சியோமி மி7 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் அண்டர்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இடம்பெறுமா என்று வேடிக்கையாகவே கேள்விகள் எழுந்தன. ஆனால் தற்போது அது உண்மையாகிவிடும் என்பது போல தெரிகிறது. அத்துடன் சேர்த்து சமீப காலமாக பிரபலமாகி வரும் 'நோட்ச்' (ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ன் டிஸ்பிளே போன்ற) வடிவமைப்பும் மி7-ல் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

19: 9 என்கிற அளவிலான திரை விகிதம்.!

19: 9 என்கிற அளவிலான திரை விகிதம்.!

இது சாத்தியமாகும் பட்சத்தில் மி7 ஆனது ஒப்போ, ஹூவாய், விவோ மற்றும் ஒன்ப்ளஸ் ஆகிய நிறுவனங்களின் பட்டியலில் இணையும். அதாவது 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம், அதில் பேஸ் ரிக்ககனைஷேஷன் வன்பொருள், செல்பீ கேமரா மற்றும் ஒரு இயர்பீஸ் இடம்பெறும். தற்போதை வரையிலாக விவோ எக்ஸ் 21 யூடி மற்றும் ஹூவாய் மேட் ஆர்எஸ் போன்ற சில ஸ்மார்ட்போன்களில் மட்டுமே அண்டர்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ் ரிக்கனைசேஷன், ஐரிஸ் ஸ்கேனர் .!

பேஸ் ரிக்கனைசேஷன், ஐரிஸ் ஸ்கேனர் .!

அம்சங்களை பொறுத்தவரை, சியோமி மி7 ஆனது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் கொண்டுள்ள அதே மேம்பட்ட முக அங்கீகாரம் அம்சங்களை கொண்டு வரும். அத்துடன் சேர்த்து ஐரிஸ் (கருவிழி) ஸ்கேனர் ஒன்றும் இடம்பெறலாம். அடு சாம்சங் கேலக்ஸி எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்களில் காணப்பட்ட அதே ஐரிஸ் ஸ்கேனிங்கை கொண்டு வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
4400எம்ஏஎச் பேட்டரி.!

4400எம்ஏஎச் பேட்டரி.!

இதர பிரதான அம்சங்களை பொறுத்தவரை, ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, 4400எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை கொண்டிருக்கும். மி மிக்ஸ் 2எஸ் உடன் ஒப்பிடும் போது மி7-ன் கேமரா மேம்படுமா அல்லது குறைவான அளவிலேயே வைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். மி7 உடன் மி 7ப்ளஸ் என்கிற ஒரு பெரிய மாறுபடும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 7 to Feature a Notch and Under-Display Fingerprint Scanner. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X