மிரட்டலான அம்சங்களுடன் நோக்கியா-ஆப்பிளுக்கு ஒருசேர ஆப்பு வைத்த மி 7.!

|

முன்னர் ஒரு காலத்தில், "என்ன மொபைல் வச்சி இருக்கீங்க.?" என்று யாரை கேட்டாலும் - "நோக்கியா" என்கிற பதில் கிடைக்கும் (இப்போது நோக்கியா மெல்ல மெல்ல எழுச்சி பெற்று வருகிறது. அது வேறு விடயம்).

அப்படியாக இந்திய மொபைல் சந்தையை ஆட்சி செய்த நோக்கியா கருவிகளின் வீழ்ச்சிக்கு பிறகு, சமீப காலமாக யாரைக்கேட்டாலும் ""சியோமி" வச்சிருக்கேன் என்கிறார்கள். அந்த அளவிலான இந்திய வீச்சை சியோமி நிறுவனம் பெறுவதற்கு காரணம் - அதன் மலிவான மற்றும் அதேசமயம் மக்களின் தேவைகளை மனதிற்கொன்டு உருவாக்கம் பெட்ரா திறன்மிக்க கருவிகளும் தான்.

அதிகப்படியான எண்ணிக்கை

அதிகப்படியான எண்ணிக்கை

நாளுக்கு நாள் சியோமி கட்டுக்கடங்காத வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என்றே கூறலாம். ஒவ்வொரு வகையான பயனர்களை மனதிற்கொண்டு (இந்திய மற்றும் இதர ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் இதை செய்வதில்லை, பிளாக்ஷிப் அல்லது போட்டிமிக்க கருவிகளில் தான் அதிக கவனம் செலுத்துகின்றன) அதிகப்படியான எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

போட்டியாக ஒரு சியோமி ஸ்மார்ட்போன்

போட்டியாக ஒரு சியோமி ஸ்மார்ட்போன்

அப்படியாக, கடந்த ஆண்டை போலவே இந்த 20018-ஆம் ஆண்டும் சியோமி நிறுவனம் பல தலைமை ஸ்மார்ட்போன்களை தொடங்கவுள்ளதாக வதந்திகள் அறிவிக்கின்றன. குறிப்பாக சமீபத்தில் வெளியானதொரு லீக்ஸ் தகவலானது நோக்கியாவின் பிரதான அம்சத்திற்கு போட்டியாக ஒரு சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகமாவுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

சியோமி மி 7

சியோமி மி 7

அந்த ஸ்மார்ட்போன் சியோமி மி 7 என்கிற பெயரை கொண்டுள்ளது. வெளியான கசிவின்படி, கூறப்படும் தொலைபேசியானது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் ஒரு பெரிய 8ஜிபி ரேம் கொண்டு வரும். அதுமட்டுமின்றி வெளியான மி7 ஸ்மார்ட்போனின் மியூஐ 9 ஸ்க்ரீன் ஷார்ட்டில் ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களும் கசிந்துள்ளன.

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

சியோமி மி 7 ஆனது ஒரு 5.6 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே கொண்டு வரலாம். அதாவது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மற்ற தலைமை ஸ்மார்ட்போன்களில் உள்ளத்தைப்போலவே டிஸ்பிளே இடம்பெறலாம். உடன் முன்னர் குறிப்பிட்டபடி இது ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்கலாம்.

64ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி

64ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி

சேமிப்பை பொறுத்தமட்டில் 64ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி போன்ற பல சேமிப்பு வகைகளில் வரும். மற்றும் இதன் ரேம் 8ஜிபி வரை நீளலாம். மி 7 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய அம்சமாக - நோக்கியா கருவிகளை குறிவைத்து இடம்பெறும் - அதன் 4480 எம்ஏஎச் பேட்டரித்திறன் திகழும்.

வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு

வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு

மேலும் சியோமி மி 7 ஆனது ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கசிந்த ஸ்கிரீன்ஷாட் சாதனமானது இக்கருவி 8.1.30எக்ஸ் பதிப்பின்கீழ் இயங்கும் என்பதைக் காட்டுகிறது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட் அல்லது அண்ட்ராய்டு ஓரியோ

ஆண்ட்ராய்டு நௌவ்கட் அல்லது அண்ட்ராய்டு ஓரியோ

இது இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. எனவே, இந்த தொலைபேசி சமீபத்திய மியூஐ கொண்டு வெளியே வரும். ஆனால் இது ஆண்ட்ராய்டில் என்ன பதிப்பை ( ஆண்ட்ராய்டு நௌவ்கட் அல்லது அண்ட்ராய்டு ஓரியோ) கொண்டுவரும் என்பதில் தெளிவில்லை, இருப்பினும் அது சுவாரஸ்யமான இருக்கும்.

பெட்டிக்கு வெளியே ஓரியோ

பெட்டிக்கு வெளியே ஓரியோ

சியோமி நிறுவனமானது ஏற்கனவே அதன் மி 6 ஸ்மார்ட்போனிற்கு ஓரியோ சோதனையை தொடங்கி விட்டதால், மி 7 ஸ்மார்ட்போன் ஆனது பெட்டிக்கு வெளியே ஓரியோ இயக்கமுறைமையை கொண்டுவரும் முதன்மை தொலைபேசியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

இரண்டு கேமரா

இரண்டு கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், மி 7 ஆனது அதன் பின்புறத்தில் இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும். அதாவது முதன்மை கேமராவான 16எம்பி சென்சார் ஆனது 5எம்பி இரண்டாம் நிலை கேமராவுடன் இணைக்கப்படும். ஏப்ரல் மாத வாக்கில் இக்கருவி அறிமுகமாகலாம்.

இரண்டு வகை

இரண்டு வகை

மேலும் இந்த சியோமி ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் அறிமுகமாகவும் வாய்ப்புள்ளது. அதாவது சிறிய மாறுபாடு மி 7 மற்றும் பெரிய மாறுபாடு மி 7 ப்ளஸ், ஆனால் இவைகள் அனைத்துமே உண்மையாக நாம் சியோமி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரை காத்திருக்க வேண்டும். மேலும் பல புதிய மற்றும் ஏற்கனவே இருக்கும் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 7 to Debut With 8GB of RAM and 4480mAh Battery in April. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X