19எம்பி + 19எம்பி + வயர்லெஸ் சார்ஜிங் என மிரட்டும் சியோமி மி7.!

சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ விசாட் சேனல் வழியாக வரவிருக்கும் மி 7 என்கிற தலைமை ஸ்மார்ட்போன் ஆனது வயர்லெஸ் சார்ஜிங் கொண்டு வரும் என்பதை அறிவித்தது.

|

முன்னர் வெளியானதொரு தகவலின்படி, சியோமி நிறுவனத்தின் மி 7 ஸ்மார்ட்போன் ஆனது வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் வெளியாகலாமென அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த அம்சம் சியோமியின் தலைமை சாதனமான மி 7-ல் நிச்சயமாக இடம்பெறுமென உறுதி செய்யப்பட்டுள்ளது.

19எம்பி + 19எம்பி + வயர்லெஸ் சார்ஜிங் என மிரட்டும் சியோமி மி7.!

சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ விசாட் சேனல் வழியாக வரவிருக்கும் மி 7 என்கிற தலைமை ஸ்மார்ட்போன் ஆனது வயர்லெஸ் சார்ஜிங் கொண்டு வரும் என்பதை அறிவித்தது. வயர்லெஸ் சார்ஜிங் தொகுதிக்கான அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுடன் ஒருங்கிணைந்து இது சாத்தியமாகவுள்ளது.

வயர்லெஸ் சார்ஜ் தரநிலை

வயர்லெஸ் சார்ஜ் தரநிலை

வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் குய் (Qi) வயர்லெஸ் சார்ஜ் தரநிலையை ஆதரிக்கும் மற்றும் இது வருகிற பிப்ரவரி மாதத்தில் பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்வில் அறிவிக்கப்படலாமென (கடந்த ஆண்டு மி5 அறிமுகமானது போலவே) எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன் ஸ்க்ரீனில் கைரேகை ரீடர்

ஆன் ஸ்க்ரீனில் கைரேகை ரீடர்

சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி ஒரு நம்பிக்கைக்குரிய கைரேகை ரீடரை, ஆன் ஸ்க்ரீனில் கொண்டிருக்கும் என்று முன்னர் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது மற்றும் இக்கருவியில் சில செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரட்டை பின்புற கேமரா

இரட்டை பின்புற கேமரா

அதாவது ஏஐ-அசிஸ்டெட் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் ஏஐ-அசிஸ்டெட் கிரின் 970 சிப்செட் மூலம் இயக்கப்படும் உடன் ஹூவாய் மேட் 10 மற்றும் மேட் 10 ப்ரோ போன்றே மி 7 ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுவருமென கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 845

ஸ்னாப்டிராகன் 845

ஏற்கனவே வரவிருக்கும் மி 7 ஆனது க்வால்காமின் முதன்மை செயலி கொண்டு வரும் என்று தெரியவந்துள்ள நிலைப்பாட்டில் இப்போது அது ஸ்னாப்டிராகன் 845 உடனான 6ஜிபி ரேம் உடன் இணையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மி 7 ஆனது ஒரு 3950எம்ஏஎச் பேட்டரி மற்றும் இரட்டை சிம் ஆதரவுகளை கொண்டிருக்கும்.

19எம்பி + 19எம்பி

19எம்பி + 19எம்பி

கேமரா துறையை பொறுத்தமட்டில், சியோமி மி 7 ஆனது இரட்டை பின்புற கேமிராக்களை கொண்டுள்ளது.அது எப் 1.7 மற்றும் 4எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 19எம்பி + 19எம்பி சென்சார் கலவையை கொடிருக்குமென கூறப்படுகிறது. முன்பக்கம், ஒரு 16 மெகாபிக்சல் சென்சார் இருக்கும்.

இரண்டு வகை சேமிப்புகளில்

இரண்டு வகை சேமிப்புகளில்

இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிப்பதாக வதந்தி நிலவுகிறது. சியோமி மி 7 ஆனது மொத்தம் இரண்டு வகை சேமிப்புகளில் - 128 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் - வெளியாகலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 7 confirmed to feature wireless charging support. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X