கான்செப்ட்: 6.01-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி மி 7.!

By Prakash
|

சியோமி மி 7 அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வரும் 2018-ம் ஆண்டு துவகத்தில் வெளியிடப்படும் என சியோமி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சமீபத்தில் தெரிவித்தது என்னவென்றால் இந்த சியோமி மி 7 ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 845 செயலி உடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவித்தார்.

பெசல்லெஸ்:

பெசல்லெஸ்:

விரைவில் சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தும் சியோமி மி 7 மற்றும் சியோமி மி 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் பெசல்லெஸ்
வடிமைப்பை கொண்டுள்ளது, மேலும் கைரேகை ஸ்கேனர் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

 சியோமி மி 7:

சியோமி மி 7:

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 6.01-இன்ச் பெரிய டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9என்ற திரை விகிதம்
இவற்றுள் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் ரியர் கேமரா:

டூயல் ரியர் கேமரா:

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது, அதன்பின் சென்சார் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி  ரேம்:

6ஜிபி ரேம்:

சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடமபெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

சியோமி மி 7 மற்றும் சியோமி மி 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் முறையே 3200எம்ஏஎச் மற்றும் 3500எம்ஏஎச் பேட்டரிகள் இடம்பெற அதிக
வாய்ப்புகள் உள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 7 concept renders give a sneak peek at the stunning design ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X