சியோமி மி 6எக்ஸ் விலை மற்றும் அம்சங்கள் வெளீயிடு.!
வெளிவந்த தகவலின் அடிப்படையில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
சியோமி நிறுவனம் இந்தியாவில் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்துவருகிறது, விரைவில் அதன் அட்டகாசமான சியோமி மி 6எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
தற்சமயம் ஆண்ட்ராய்டு.காம் எனும் வலைதளத்தில் இருந்து மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்போது மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலையைப் பார்ப்போம்.

திரைவிகிதம்:
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

சேமிப்பு:
வெளிவந்த தகவலின் அடிப்படையில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 :
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவருவதால் அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா பொறுத்தவரை 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2910எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் கருப்பு, தங்கம், சிவப்பு, பிங்க் மற்றும் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விலை:
இந்த சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.18,000-ஆக உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications