இந்தியாவின் அடுத்த BEST SELLING ஸ்மார்ட்போனை மிட்ரேன்ஜ் பிரிவில் களமிறக்கிய சியோமி.!

சியோமி நிறுவனத்தின் மற்றொரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன மி 6எக்ஸ், வுஹான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

|

சியோமி நிறுவனத்தின் மற்றொரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன மி 6எக்ஸ், வுஹான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன், சியோமி மி ஏ2 என்கிற பெயரில் (ஸ்டாக் ஆண்ட்ராய்டு அடிப்படையின் கீழ் இயங்கும்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் BEST SELLING ஸ்மார்ட்போனை களமிறக்கிய சியோமி.!

மிகப்பெரிய அளவிலான பிரபலத்தன்மையை கொண்டுள்ளதால், மிக விரைவில் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சியோமி மி 6எக்ஸ் (அல்லது சியோமி மி ஏ2) ஸ்மார்ட்போனின் பிரதான மற்றும் ஏனைய அம்சங்கள் என்னென்ன.? இதன் விலை நிர்ணயம் என்ன.? என்பதை பற்றி விரிவாக காணலாம்.

சியோமி மி 6எக்ஸ் (சியோமி மி ஏ2) விலை நிர்ணயம்.!

சியோமி மி 6எக்ஸ் (சியோமி மி ஏ2) விலை நிர்ணயம்.!

மொத்தம் மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ள சியோமி மி 6எக்ஸ்-ன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவியலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது தோராயமாக ரூ.16,900/-க்கும், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது சுமார் ரூ.19,000/-க்கும் மற்றும் இறுதியாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாடல் ஆனது சுமார் ரூ.21,000/-க்கும் இந்தியாவில் அறிமுகமாகலாம்.

சீன மற்றும் இந்திய விற்பனை.!

சீன மற்றும் இந்திய விற்பனை.!

ரெட், கோல்ட், ரோஸ் கோல்ட், ப்ளூ மற்றும் பிளாக் போன்ற ஐந்து வண்ண விருப்பங்கள் வெளியாகியுள்ள சியோமி மி 6எக்ஸ் (சியோமி மி ஏ2) ஆனது வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 27 ஆம் தேதி) முதல், சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இதன் இந்திய விற்பனை பற்றிய விவரங்கள் ஏதும் இல்லை.

மி 6எக்ஸ் (மி ஏ2) அம்சங்கள்.!

மி 6எக்ஸ் (மி ஏ2) அம்சங்கள்.!

சியோமி 6எக்ஸ் ஆனது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் குறுகிய பெஸல்கள் கொண்ட 5.99 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதாவது ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை போன்றே உள்ளது. இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட மியூஐ 9.5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி, அட்ரெனோ 512 ஜிபியூ மற்றும் 6ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது.

20 மெகாபிக்சல் செல்பீ கேமரா.!

20 மெகாபிக்சல் செல்பீ கேமரா.!

இந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சமாக அதன் கேமராக்கள் உள்ளன. இது மேம்பட்ட புகைப்படங்களை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு திறனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், சோனி IMX376 சென்சார், எப் / 1.75 துளை, நிலையான போக்கல் லெங்த் மற்றும் மென்மையான எல்இடி ப்ளாஷ் ஆகியவைகளை கொண்ட ஒரு 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

12 மெகாபிக்சல் மற்றும்  20 மெகாபிக்சல் ரியர் கேமரா.!

12 மெகாபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் ரியர் கேமரா.!

பின்பக்கத்தில், எப் / 1.75 துளை மற்றும் 1.25 மைக்ரான் பிக்சல் அளவு கொண்ட 12 மெகாபிக்சல் முதன்மை சோனி IMX486 சென்சார் மற்றும் அதே துளை மற்றும் 1 மைக்ரான் பிக்சல் அளவு கொண்ட 20 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சோனி IMX376 சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதன் பின்புற கேமராவானது பேஸ் டிடெக்ஷன் ஆட்டோ போகஸ் மற்றும் டூயல் டோன் எல்இடி ப்ளாஷ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ் அன்லாக், கைரேகை சென்சார்.!

பேஸ் அன்லாக், கைரேகை சென்சார்.!

சியோமி 6எக்ஸ்-ன் அனைத்து கேமராக்களுமே, சிறந்த நிறங்கள், போர்ட்ரெயிட், பொக்கே விளைவுகள், ஏஐ ஸ்மார்ட் பியூட்டி 4.0 போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஏஐ கொண்டு இயங்கும் மொழிபெயர்ப்பு திறனையும் கொண்டுள்ளது. அதாவது சீன மொழியை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஜப்பனீஸ், கொரிய மற்றும் பல இந்திய மொழிகளுக்கு மாற்றம் செய்யும் திறனை கொண்டுள்ளது. பேஸ் அன்லாக் கொண்டிருக்கும் மறுபக்கம் கைரேகை சென்சார் ஒன்றையும் அதன் பின்புறத்தில் கொண்டு உள்ளது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை.!

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை.!

3010mAh என்கிற பேட்டரி திறன் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் க்விக்சார்ஜ் 3.0-க்கான ஆதரவுடன் வருகிறது. அது 30 நிமிடங்களில் 0-ல் இருந்து 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. மி 6எக்ஸ் (மி 2ஏ) ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் Wi-Fi / A / b / g / n / ac, வைஃபை டைரக்ட், மிராகேஸ்ட், ப்ளூடூத் 5.0, ஐஆர் எமிட்டர், யூஎஸ்பி டைப் -சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இருப்பினும், 3.5மிமீ ஹெட்ஜாக் இடம்பெறவில்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 6X (Mi A2) With Dual Rear Cameras, AI Integration Launched: Price, Specifications, Release Date. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X