டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் சியோமி மி 6எக்ஸ்.!
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் பெசல்லெஸ் டிஸ்பிளே, கைரேகை சென்சார், டூயல் கேமரா போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் விரைவில் டூயல் ரியர் கேமரா வசதியுடன் சியோமி மி 6எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் இந்த சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் பின்புறம் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அந்த அம்சங்கள் இந்த சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் சியோமி மி 6எக்ஸ் பின்புற பேனல் தற்சமயம்
இணையதளத்தில் வெளிவந்துள்ளது.
சியோமி மி 6 இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்தது, இதனை அடுத்து அடுத்த வருடம் துவகத்தில் இந்த சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் பெசல்லெஸ் டிஸ்பிளே, கைரேகை சென்சார், டூயல் கேமரா போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்தள்ளது, இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது.

சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.01-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு18:9என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் பெசல்லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications