ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 6எக்ஸ்.!
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது சியோமி நிறுவனம், மேலும் கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்தது இந்நிறுவனம். குறிப்பாக இந்த ஆண்டு பல்வேறு அதிநவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். அதன்படி வரும் ஏப்ரல் 25-ம் தேதி இந்த சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி 6எக்ஸ் சாதனத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் இதன் கேமரா வடிவமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் இந்த மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் களமிறங்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

செயற்கை நுண்ணறிவு:
சியோமி மி 6எக்ஸ் சாதனத்தில் கேமரா செயல்பாடுகள் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி யுஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக அதநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு :
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா பொறுத்தவரை 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2910எம்ஏஎச்:
சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2910எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications