Home
Mobile

அடுத்த மாதம் களமிறங்கும் சியோமி மி 6சி அல்லது மி6 எக்ஸ் (லீக்ஸ் அம்சங்கள்).!

கூறப்படும் மி 6சி ஸ்மார்ட்போனிலும் 18: 9 விகிதம் கொண்ட ஒரு முழு திரை டிஸ்பிளே சார்ந்த பணிகளில் நிறுவனம் ஈடுபடுவதாக தெரிகிறது.

By Muthuraj

சியோமி நிறுவனம், வரும் வாரங்களில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் தொடங்குவது சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதென்பதை நாம் அறிவோம்.

அடுத்த மாதம் களமிறங்கும் சியோமி மி 6சி அல்லது மி6 எக்ஸ்.!

அந்த புதிய ஸ்மார்ட்போன்கள் ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5ப்ளஸ் கருவிகளாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு புதிய ரெட்மீ தொடர் கருவிகளும் 18: 9 என்ற விகிதத்துடன் கூடிய டிஸ்பிளே அம்சத்தினை பெறலாமென முந்தைய லீக்ஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே

எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே

இந்நிலைப்பாட்டில் தற்போது வெளியாகியுள்ள ​​ஒரு புதிய வதந்தியானது நிறுவனத்தின் மி 6 ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, கூறப்படும் மி 6 ஆனது ஒரு எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே மாதிரியாக இருக்கும் என்று கூறுகிறது.

புதிய சர்ஜ் எஸ்2 சிப்செட்

புதிய சர்ஜ் எஸ்2 சிப்செட்

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மி 5சி ஸ்மார்ட்போனின் அடுத்தக்கட்ட மாறுபாடான மி 6சி ஆனது ஒரு புதிய சர்ஜ் எஸ்2 சிப்செட் அம்சத்தினை தன்னுள் கொண்டுவரும் என்றும் வெளியான லீக்ஸ் தகவலில் கூறப்பட்டுள்ளது. கூறப்படும் மி 6சி ஸ்மார்ட்போனிலும் 18: 9 விகிதம் கொண்ட ஒரு முழு திரை டிஸ்பிளே சார்ந்த பணிகளில் நிறுவனம் ஈடுபடுவதாக தெரிகிறது.

மூன்றாம் காலாண்டில் தொடங்கும்

மூன்றாம் காலாண்டில் தொடங்கும்

மி 5சி ஸ்மார்ட்போன் ஆனது சார்ஜ் எஸ்1 மூலம் இயங்குவதால் மி 6சி ஆனது புதிய சர்ஜ் எஸ்2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம் என்று வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முன்னர் வெளியான அறிக்கைகள், சார்ஜ் எஸ்2 சிப்செட்டின் உற்பத்தி மூன்றாம் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5.65 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே

5.65 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே

இன்னும் சில அறிக்கைகள், மி 6சி ஆனது ஒரு ஸ்னாப்டிராகன் 652 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்று கூறுயதுமிங்கு குறிப்பிடத்தக்கது. தவிர, இந்த ஸ்மார்ட்போன் 18: 9 விகிதம் கொண்ட 5.65 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே கொண்டிருக்கலாம். இக்கருவி சியோமி 6சி என்ற பெயரில்லாது மி 6எக்ஸ் என்ற பெயரிலும் வெளியாகலாம்.

பின்புறம்-ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனர்

பின்புறம்-ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனர்

வடிவமைப்பின் அடிப்படையில் பார்த்தால், மி 6சி ஸ்மார்ட்போன் முழு திரையில் வடிவமைக்கப்படுவதால், அது ஒரு பின்புறம்-ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் மி 6 ஸ்மார்ட்போன் போலவே மி 6சி ஆனது கிளாஸ் சேஸிஸ் கொண்டு வருவதற்கும் வாய்ப்புள்ளது

இரண்டு சேமிப்பு மாதிரி

இரண்டு சேமிப்பு மாதிரி

சியோமி மி 6சி ஆனது இரண்டு சேமிப்பு மாதிரிகளில் - அதாவது 4 ஜிபிரேம் + 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி உள்ளடக்க சேமிப்பில் - வெளியாகலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், முறையே சுமார் ரூ.18,900/- மற்றும் சுமார் ரூ.23,600/- என்ற புள்ளியை எட்டலாம்.

12 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல்

12 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல்

சியோமி மி 6சி ஸ்மார்ட்போனின் கேமரத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி மி 6சி ஸ்மார்ட்போனின் மேலும் பல அப்டேட் தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 6C with Surge S2 chipset to launch next month:Report. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X