விரைவில் : டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் சியோமி மி 6சி.!
சியோமி மி 6சி ஸ்மார்ட்போன் 5.15-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி நிறுவனம் கூடிய விரைவில் சியோமி மி 6சி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின் இக்கருவியில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ள, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

சியோமி மி 6சி ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதன்பின் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

சியோமி மி 6சி :
சியோமி மி 6சி ஸ்மார்ட்போன் 5.15-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2730எம்ஏஎச்:
சியோமி மி 6சி பொறுத்தவரை 2730எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது .


Click it and Unblock the Notifications