சியோமி மி 6 : விலை, அம்சங்கள், வெளியீட்டு தேதி.!
ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு இயங்கும் முதல் சீன சாதனமாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும்.!
சியோமி நிறுவனத்தின் பிரபலமான கருவியான மி வரிசையில் அடுத்த வெளியாக காத்திருக்கும் கருவியாக மி 6 ஸ்மார்ட்போன் திகழ்கிறது. சியோமி நிறுவனத்தின் தலைமை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் நம்பப்படும் மி 6 கருவியானது நீண்ட காலமாக வதந்திகளுக்குள் மூழ்கி திளைக்கும் ஒரு கருவியாகும். ஒருவழியாக தற்போது வரும் ஏப்ரல் 16-இல் சீனாவில் இக்கருவி வெளியாகப்படும் என்ற தகவல் ஒரு புதிய கசிவின் வழியாக அறியப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு இயங்கும் முதல் சீன சாதனமாக இருக்கும் என்றும் வெளியான தகவல்கள் குறிப்பிட்டுள்ளது. மேலும் இக்கருவி கொண்டுள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

பீங்கான் பூச்சு
சியோமி மி 6 மி மிக்ஸ் கருவி போன்றே ஒரு பீங்கான் பூச்சு, மேல் 2.5டி வளைந்த கண்ணாடி, 5.2 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ள இக்கருவி வெளியாகும் என்று வதந்தி நிலவுகிறது.

கேமரா
மேலும் இந்த சாதனம் எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட் பிரீமியம் கருவி போன்றே ஒரு கேமரா கொண்டிருக்கும் என்றும் வெளியான தகவல்கள் அறிவுறுத்துகிறது.

சேமிப்பு வகை
உடன் 32ஜிபி மற்றும் 64ஜிபி வரை சேமிப்பு உடனான ஒரு 4ஜிபி ரேம் மாறுபாடு மற்றும் 128ஜிபி சேமிப்பு உடனான 6ஜிபி ரேம் என மொத்தம் மூன்று வெவ்வேறு சேமிப்பு வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை
குறிப்பாக 6ஜிபி ரேம் மாறுபாடு ஒரு பிரீமியம் பீங்கான் யூனிபாடி வடிவமைப்பு கொண்டு வரும் என்று வதந்தி நிலவுகிறது. சியோமி மி 6 கருவியின் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் இதன் இறுதியில் மாறுபாடு சுமார் ரூ.20,000/- இருக்கலாம்.

இரண்டாவது பெரிய நிறுவனம்
ஒருவேளை சாம்சங் நிறுவனம் மார்ச் 29 ஆம் தேதி அதன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்ட கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ கருவியை அறிவித்தால், இவ்வகை க்வால்காம் கொண்டு வெளியாகும் இரண்டாவது பெரிய நிறுவனமாக சியோமி திகழும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
6ஜிபி ரேம், 41எம்பி கேம் - வாய்பிளக்க வைக்கும் நோக்கியா 9.!


Click it and Unblock the Notifications