உறுதியாகிறது சியோமி மி 6 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு.!
இந்த சாதனம் அதன் நிலையான சியோமி மி மாறுபாட்டை விட ஒரு பெரிய திரை அளவு கொண்டிருப்பதாக வெளியான தகவலில் உள்ள படம் தெளிவுபடுத்துகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சியோமி வெற்றிகரமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொலைபேசியான மி 6 சாதனத்தை ஒரு மலிவு விலை வரம்பில் தொடங்கியது. அதே சாதனத்தின் பிளஸ் மாறுபாடு சிறிது நேரம் கழித்து தொடங்கப்படும் என்று வதந்திகளும் அப்போது வெளியாகின.

புகைப்படம் : ஐகீக்போன்
ஆனால், இப்போது வெளியாகியுள்ள தகவலின் கீழ் மி 6 ஆனது இந்த கோடையில் வெளியிடப்படும் என்று கூறுகிறது. வெளியான அறிக்கை ஒன்றின் படி, இந்த கைபேசியின் வெளியீட்டு தேதி பங்கு பிரச்சினை காரணமாக தாமதமானது. இப்போது, இந்த தொலைபேசி ஒரு சில புதிய வடிவமைப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் வண்ணம் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த சாதனம் அதன் நிலையான சியோமி மி மாறுபாட்டை விட ஒரு பெரிய திரை அளவு கொண்டிருப்பதாக வெளியான தகவலில் உள்ள படம் தெளிவுபடுத்துகிறது.
முன்னதாக வெளியான மற்றொரு தகவலின் கீழ் இந்த வரவிருக்கும் சாதனமானது சியோமி மி மிக்ஸ் போன்ற ஒரு காட்சி கொண்டிருக்க வேண்டும் என்று கூறியது. ஆனால், சாமீபத்திய கசிவு மி 6 ப்ளஸ் ஆனது அதை விட பெரிய அளவிலான டிஸ்பிளே கொண்டிருப்பதை காட்சிப்படுத்துகிறது.
மேலும் முந்தைய கசிவுகள் படி, சாதனம் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்ட ஒரு 5.7 அங்குல காட்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை கேமரா அமைப்பானது எல்இடி ப்ளாஷ் கொண்டிருக்கும் மற்றும் இந்த சாதனம் 4050எம்ஏஎச் என்றவொரு ஒரு பெரிய பேட்டரித்திறன் கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி-சி போர்ட் ஆகிய ஆதரவுகளை பயன்படுத்துவதாக சில வதந்திகள் கூறின. மேலும் இந்த சாதனம் ஸ்னாப்டிராகனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான 835 சிப்செட் கொண்டு வெளியாகும் மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி சேமிப்பு ஆதரவு கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இதர தகவல்கள் வெளியாகாத பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பிளஸ் வேறுபாட்டில் இன்னும் பெரிய அம்சங்களை எதிர்பார்க்கலாம். இதன் கிடைக்கும்தன்மை பற்றிய விவரங்கள் இல்லாத போதிலும் இக்கருவி 2999 யுவான் (500 டாலர்கள்) என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்பது கிட்டத்தட்ட உறுதி.


Click it and Unblock the Notifications