மிரட்டும் டிசைன்; டூயல் கேம்; 6ஜிபி ரேம் உடன் சியோமி மி 6 ப்ளஸ்.!?

|

சியோமி மி 6 ப்ளஸ் ஸ்மார்ட்போன் தான் சியோமி நிறுவனத்திடம் இருந்து அடுத்தபடியாக எதிர்பார்க்கப்படும் பிரதான சாதனமாக உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட சியோமி மி6 ஸ்மார்ட்போனின் அப்டேட் மாறுபாடான இயக்கருவி சார்ந்த சமீபத்திய லீக்ஸ் நம் ஆர்வத்தை மென்மேலும் கிளப்பும் வண்ணம் உள்ளது.

இப்போது வெளியாகியுள்ள மி 6 பிளஸ் சார்ந்த ஆன்லைன் கசிவை மொபைல்எக்ஸ்போஸ் அறிக்கை நிகழ்த்தியுள்ளது. வெளியான அறிக்கையின்கீழ் மி6 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் இரண்டு வகையான கேஸ்களின் புகைப்படங்கள் (ஒன்று முன்னர் வெளியான மி 6 ஸ்மார்ட்போனின் கேஸ் மற்றொன்று வரவிருக்கும் மி6 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் கேஸ்) வெளியாகியுள்ளன.

இரட்டை கேமரா அம்சம்

இரட்டை கேமரா அம்சம்

இந்த புகைப்படத்தில் இருந்து சியோமி மி 6 ப்ளஸ் சாதனத்தின் பின்பக்கம் இரட்டை கேமரா அம்சம் உள்ளது வெளிப்படையாக தெரிகிறது. வெளியான இரு கேஸ்களும் நிறுவனத்தின் லோகோவை மற்றும் பக்கங்களில் வளைந்திருக்கும் வடிவமைப்பையும் காண்பிக்கின்றன.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

புகைப்படத்தில் 5.15 அங்குல திரை அளவை கொண்டு வெளியான மி 6 சாதனத்தை விட பெரிதாக தெரியும் மி 6 ப்ளஸ் ஆனது ஒரு பெரிய 5.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இரட்டை கேமரா அமைப்பு, இரட்டை எல்இடி மற்றும் இரட்டை தொனியில் ஆகிய அம்சங்களை சாதனத்தின் இடது பக்கத்தின் மேல் மூன்று வெட்டுத்தொகுப்புகள் காட்டிக் கொடுக்கிறது.

3சி சான்றிதழ்

3சி சான்றிதழ்

முன்னர் சியோமி மி 6 ப்ளஸ் அக்கருவிக்கு மாதிரி எண் எம்டிஇ40 என்ற பெயரின்கீழ் தேவையான 3சி சான்றிதழ் கிடைத்தாக தகவல் வெளியானது. சமீபத்தில், வடிவமைப்பில் முதன்மையான தோற்றத்தை மி 6 ப்ளஸ் பெறும் என்றும் மி 6 ப்ளஸ் வழக்கத்திற்கு மாறான பெரிய திரை அளவு கொண்டிருக்கும் என்றும் தெரியவந்தது.

ஆடியோ ஜாக் கொண்டிருக்காது

ஆடியோ ஜாக் கொண்டிருக்காது

மற்றும் அது ஒரு 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டிருக்காது என்றும், மி 6 ப்ளஸ் ஆனது இந்த கோடை காலத்தில் எப்போதாவது வெளியிடப்படும் என்றும் வதந்திகள் அளித்த தகவலின் கீழ் எதிர்பார்க்கப்படுகிறது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

இதுவரை வெளியான மி 6 ப்ளஸ் குறிப்புகளை பொறுத்தவரை, அதில் 1920 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட பெரிய 5.7 அங்குல முழு எச்டி டிஸ்பிளே இடம்பெறும் கூறப்படுகிறது மற்றும் 64ஜிபி / 128ஜிபி உள் நினைவகதுடன் 6ஜிபி ரேம் கொண்டிருக்க வேண்டும்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

மேலும் இந்த ஸ்மார்ட்போன் சக்தி வாய்ந்த 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 8 கொண்டு இயங்கும். கேமராவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஒரு 12 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்362 சென்சார் கொண்ட இரண்டு இரட்டை கேமரா அமைப்பு அம்சம் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835

சாதனத்தின் முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் செல்பீக்கள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் தீவிர பிக்செல்பீ கேமரா இடம்பெறலாம். 3சி சான்றிதழ் தளத்தின்படி, சாதனம் 18வாட் பாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 உடனான அட்ரெனோ 540 ஜிபியூ செயலியுடன் இணைந்து இயங்கும். உடன் ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை போன்ற இணைப்பு அம்சங்களையும் கொண்டிருக்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 6 Plus back cover spotted again. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X