பெஞ்ச்மார்க் பட்டியலில் சிக்கியது : சியோமி மி 6 மற்றும் மி மேக்ஸ் 2.!
என்னென்ன அம்சங்கள்.?? என்னென்ன மாறுபாடுகள்.? என்ன விலை நிர்ணயம்.?
சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்று, பெரும்பாலான இந்தியர்கள் பிறருக்கு சியோமி ஸ்மார்ட்போன் வாங்குங்கள் என்றே பரிந்துரை செய்வதாக கூறுகிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் சியோமி கருவிகள் பிரபலமா.? என்று கேட்டால் ஆம் நிச்சயமான என்பது தான் எண்களின் பதில்.!
அப்படியாக சியோமி ரெட்மீ கருவிகளுக்கு பின்னர் மிகவும் பிரபலமான சியோமி கருவிகளாய் திகழும் மி 6 பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் சேர்ந்து மி மேக்ஸ் 2 கருவி சார்ந்த பென்ச்மார்க் தகவலும் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனத்தின் தலைமை சாதனமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டும் மி 6 கருவியானது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கலாம் மற்றும் ஒரு 5.1 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம்.

64ஜிபி அல்லது 128ஜிபி
க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் இக்கருவி 4ஜி அல்லது 6ஜிபி ரேம் கொண்டிருக்கலாம் உடன் அதன் 64ஜிபி அல்லது 128ஜிபி அளவிலான உள்ளடங்கிய சேமிப்பு கொண்டிருக்கலாம்.

4கே பதிவு ஆதரவு
கேமரா துறையை பொறுத்தவரை, சியோமி மி 6 கருவியானது 4கே வீடியோ பதிவு ஆதரவுடன் 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 4கே பதிவு ஆதரவு கொண்ட 8 மெகாபிக்சல் முன் பக்க ஸ்நாப்பர் கொண்டிருக்கலாம்.

ஓல்இடி டிஸ்ப்ளே
முன்பு வெளியான தகவலில் இடம் பெறாத ஒரு அம்சமாக அதன் இரட்டை வளைந்த விளிம்புகள் கொண்ட ஒரு க்யூஎச்டி 2 கே ஓல்இடி டிஸ்ப்ளே இந்த தகவலில் இடம்பெற்றுள்ளது உடன் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கிறது.

மி 6
மேலும் சியோமி மி 6 கருவியின் கூறப்படும் 4ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு, 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு ஆகிய மாறுபாடுகள் முறையே சுமார் ரூ.19,000/-, ரூ.21,800/- மற்றும் ரூ.25,600/- என்ற விலை நிர்ணயம் பெறலாம்.

மி 6 ப்ளஸ்
மறுபக்கம் சியோமி மி 6 ப்ளஸ் கருவியின் கூறப்படும் 4ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு, 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு ஆகிய மாறுபாடுகள் முறையே சுமார் ரூ.24,700/-, ரூ.28,500/- மற்றும் ரூ.33,200/- என்ற விலை நிர்ணயம் பெறலாம்.

128ஜிபி சேமிப்பு
மி மேக்ஸ் 2 கருவியை பொருத்தமட்டில் இக்கருவி 6.4 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டு 4ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு, 12எம்பி பின்புற கேமரா, 5-மெகாபிக்சல் முன்பக்க கேமரா, மற்றும் என்எப்சி ஆதரவு ஆகிய அம்சங்களி கொண்டிருக்கலாம்.

5000எம்ஏஎச் பேட்டரித்திறன்
மேலும் இந்த ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியான முந்தைய லீக்ஸை தகவலில் இக்கருவி ஸ்னாப்ட்ராகன் 660 செயலி மூலம் இயக்கப்படும் மற்றும் ஒரு 5000எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று அறியப்படுகிறது.

மேலும் படிக்க
பட்ஜெட் விலையில் 5-இன்ச், 3020எம்ஏஎச் கொண்ட ஹானர் 6சி.!


Click it and Unblock the Notifications