Home
Mobile

இரட்டை பின்புற கேமராக்களுடன் சியோமி மி 5எக்ஸ்.!

வெளியான இந்த டீஸரின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் இரட்டை பின்புற கேமராக்களை கொண்டுள்ளதையும், கைரேகை சென்சார் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது.

By Muthuraj

சியோமி மி 5எக்ஸ் சார்ந்த லீக்ஸ் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் அக்கருவி சார்ந்த சில அதிகாரப்பூர்வமான விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதாவது, சியோமி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக, வருகிற ஜூலை 26-ஆம் தேதி அன்று அதன் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன மி 5எக்ஸ் ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதாக என்று அறிவித்துள்ளது.

இரட்டை பின்புற கேமராக்களுடன் சியோமி மி 5எக்ஸ்.!

சியோமி நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ விபோ அக்கவுண்டில் ஒரு டீஸரை வெளியிட்டது. அது, மி 5எக்ஸ் சாதனத்தை பிரபல நடிகரான கிறிஸ் வூவின் அவர் கையில் வைத்திருக்கும் ஒரு படமாகும். வெளியான இந்த டீஸரின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் இரட்டை பின்புற கேமராக்களை கொண்டுள்ளதையும், கைரேகை சென்சார் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. மேலும் வரவிருக்கும் சியோமி நிறுவனத்தின் மியூஐ (MIUI) 9 இயங்குதளமும் மி 5எக்ஸ் சாதனத்தோடு வெளியாகுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை பின்புற கேமராக்களுடன் சியோமி மி 5எக்ஸ்.!

இதற்கு முன்னதாக கசிந்த போஸ்டரின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் 1999 சீன யுவான் என்ற விலை குறியீட்டை கொண்டு வருகிறது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.19,000/- என்ற விலை நிர்ணயம் பெறலாம். வெளியாகியுள்ள விலை டேக் உண்மையென்ற பட்சத்தில், அது ஒப்போ மற்றும் விவோ ஸ்மார்ட்போன்களுடன் கடுமையான போட்டியை நிகழ்த்தும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஸ்மார்ட்போனின் செயலியை பொறுத்தமட்டில், இக்கருவி க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 செயலி உடனான 4 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. முன்னர் இந்த தொலைபேசி க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 சிப்செட் கொண்டு அறிமுகமாகுமென்று அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் லீக் போஸ்டர் ஆனது ஒரு வங்கியான விளம்பரம் போல தோன்றுவதால் இந்த அறிக்கையை சிறிதளவே எடுத்துக்கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

மேலும், ஸ்மார்ட்போனின் செலீப் கேமரா பொறுத்தவரை இரட்டைஸ் செல்பீ கேமரா அமைப்பு இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கேமரா சென்சார்கள் மற்றும் அவற்றின் தீர்மானம் தற்போது தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 5X with dual rear cameras, MIUI 9 set to launch on July 26. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X