சியோமி மி 5எக்ஸ் புதிய மாறுபாடு அறிமுகம் (அம்சங்கள்).!
ஆண்ட்ராய்ட் 7.1.1 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 இயக்க முறைமை கொண்டு இயங்கும் மற்றும் 3080எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டது.
கடந்த மாதம் சியோமி நிறுவனத்தின் மி 5எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு மாதிரி சீனாவில் தொடங்கப்பட்டது. இப்போது சியோமி 5எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்சேமிப்பு மாதிரி கொண்ட ஒரு மலிவான மாறுபாடு சீனாவில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

4ஜிபி மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு கொண்ட சியோமி மி 5எக்ஸ் ஆனது ரூ.14,285/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. ஆக இந்த புதிய மாறுபாடு ரூ.12,465/- என்ற விலை நிர்ண்யத்தை பெறலாம். நினைவக கட்டமைப்பை தவிர, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாறுபாடானது அம்சங்களில் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன.

இரட்டை கேமரா அமைப்பு
சியோமி மி 5எக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், பின்புறம் 1.25-மைக்ரான் பிக்சல் சென்சார், எப்/ 2.2 துளை கொண்ட 12 மெகாபிக்சல் மற்றும் 1 மைக்ரான் பிக்சல் சென்சார் மற்றும் எப் / 2.6 துளை உடன் டெலிபோட்டோ பரந்த கோண லென்ஸ் கொண்ட 12எம்பி என ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது.

கர்வுடு டிஸ்பிளே
முன்பக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ள சியோமி மி 5எக்ஸ் ஆனது முழுமையான உலோக உட்புற வடிவமைப்பை கொண்ட 5.5 அங்குல முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) கர்வுடு டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 450 நிட்ஸ் வரை பிரகாசம் அளிக்கக்கூடியது.

செயலி
2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி மற்றும் அட்ரெனோ 506 ஜிபியூ உடனான 4 ஜிபிரேம் இணைந்து இயக்கப்படுகிறது. இது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை நீட்டிக்கக் கூடிய ஆதரவுடன் 32 ஜிபி உள்சேமிப்பு திறனை வழங்குகிறது.

பேட்டரித்திறன்
ஹைபிரிட் இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆன இது ஆண்ட்ராய்ட் 7.1.1 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 இயக்க முறைமை கொண்டு இயங்கும் மற்றும் 3080எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டது.

இணைப்பு ஆதரவு
இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் ப்ளூடூத் 4.2, வைஃபை (802.11 பி / ஜி/ என்), ஏஜிஎஸ்/ க்ளோநாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப் சி, ஜிபிஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.

சென்சார்
அளவீட்டில் 155.4 x 75.8 x 7.3 மிமீ மற்றும் 165 கிராம் எடையுள்ள இக்கருவி ஆக்சிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட்சென்சார், ஜியோர்ஸ்கோப், இன்ப்ராரெட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி ஆகிய சென்சார்களையும் இக்கருவி தன்னுள் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications