அறிமுகம் : பிரகாசமான சிவப்பு வண்ணத்தில் சியோமி மி 5எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன்.!

Written By:

சியோமி நிறுவனம், மி 5எக்ஸ் என்றவொரு சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. சிவப்பு வண்ண மாறுபாட்டில் வெளியாகியுள்ள இந்த சியோமி மி 5எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1499 யுவான் அதாவது ரூ.14,285/- என்ற விலை நிர்ணயப்புள்ளியை பெற்றுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் ஆனது சீனாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் முன்பதிவுகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது, நவம்பர் ஒன்றாம் தேதி முதல் டெலிவரியை தொடங்கும். தற்போது, இந்த ​​சாதனம் தங்கம், கருப்பு மற்றும் ரோஸ் தங்கம் ஆகிய வண்ண மாறுபாடுகளில் கிடைக்கின்ற நிலைப்பாட்டில் தற்போது அதன் சிறப்பு பதிப்பு வெளியீட்டுக்கு பின்னர் மொத்தம் நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிரகாசமான சிவப்பு வண்ணம்

பிரகாசமான சிவப்பு வண்ணம்

சீனாவில் வெளியான போஸ்டரின் படி, மி 5எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் பிரகாசமான சிவப்பு வண்ணத்தை கொண்டுள்ளது, அதே நேரத்தில் முன்பக்கம் கருப்பு வண்ணம் விளையாடுகிறது.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

சியோமி மி 5எக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், பின்புறம் 1.25-மைக்ரான் பிக்சல் சென்சார், எப்/ 2.2 துளை கொண்ட 12 மெகாபிக்சல் மற்றும் 1 மைக்ரான் பிக்சல் சென்சார் மற்றும் எப் / 2.6 துளை உடன் டெலிபோட்டோ பரந்த கோண லென்ஸ் கொண்ட 12எம்பி என ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது

கர்வுடு டிஸ்பிளே

கர்வுடு டிஸ்பிளே

முன்பக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ள சியோமி மி 5எக்ஸ் ஆனது முழுமையான உலோக உட்புற வடிவமைப்பை கொண்ட 5.5 அங்குல முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) கர்வுடு டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 450 நிட்ஸ் வரை பிரகாசம் அளிக்கக்கூடியது.

4 ஜிபிரேம்

4 ஜிபிரேம்

2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி மற்றும் அட்ரெனோ 506 ஜிபியூ உடனான 4 ஜிபிரேம் இணைந்து இயக்கப்படுகிறது. இது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை நீட்டிக்கக் கூடிய ஆதரவுடன் 32 ஜிபி உள்சேமிப்பு திறனை வழங்குகிறது.

பேட்டரித்திறன்

பேட்டரித்திறன்

ஹைபிரிட் இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆன இது ஆண்ட்ராய்ட் 7.1.1 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 இயக்க முறைமை கொண்டு இயங்கும் மற்றும் 3080எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் ப்ளூடூத் 4.2, வைஃபை (802.11 பி / ஜி/ என்), ஏஜிஎஸ்/ க்ளோநாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப் சி, ஜிபிஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.

சென்சார்

சென்சார்

அளவீட்டில் 155.4 x 75.8 x 7.3 மிமீ மற்றும் 165 கிராம் எடையுள்ள இக்கருவி ஆக்சிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட்சென்சார், ஜியோர்ஸ்கோப், இன்ப்ராரெட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி ஆகிய சென்சார்களையும் இக்கருவி தன்னுள் கொண்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Xiaomi Mi 5X Special Edition announced in China. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot