செப்டம்பர் 5 : டூயல் கேமராவுடன் வெளிவரும் சியோமி மி 5எக்ஸ்.!
சியோமி மி 5எக்ஸ் பொறுத்தவரை 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஃபிளாக்ஷிப் டூயல் கேமராவுடன் சியோமி மி 5எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது சியோமி நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த சியோமி மி 5எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 625 செயலி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
சியோமி மி 5எக்ஸ் பொறுத்தவரை 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி எல்டிபிசி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம் :
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 62ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
ஜிபிஎஸ், வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3080எம்ஏஎச்:
சியோமி மி 5எக்ஸ் பொறுத்தவரை 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications