அறிமுகம் : மிரட்டலான மி 5எக்ஸ் மற்றும் மிக வேகமான மியூஐ 9.!

|

சியோமி நிறுவனத்தின் பிளாக்ஷிப் தொலைபேசிகளில் ஒன்றான மி 6 அதன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மிகவும் பேசப்படும் ஒரு அம்சமாய் இருக்கும் நிலைப்பாட்டில் இன்று (புதன்கிழமை) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி மி 6 சாதனத்தின் ஒரு மலிவான அல்லது மினி பதிப்பு என்று கூறப்படும் மி 5எக்ஸ் சாதனத்தில் இரட்டை பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.

மி 6 ஸ்மார்ட்போன் ஆனது 12-மெகாபிக்சல் + 12-மெகாபிக்சல் பின்புற இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. அதன் ஒரு லென்ஸ் பரந்த கோணத்தில் புகைப்படங்கள் எடுக்க உதவ மற்றொன்று டெலிஃபோட்டோக்களுக்கானதாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சியோமி சாதனம் கொண்டுள்ள சென்சார்கள் சார்ந்த அதிகார்பூர்வ விவரங்கள் குறிப்பிடவில்லை என்றாலும், மி 5எக்ஸ் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறுவதென்பது உறுதியாகியுள்ளது.

இரட்டை கேமரா

இரட்டை கேமரா

மி 6 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் அதே எம்பி கேமராக்கள் அல்லது சற்று குறைவான எம்பி கேமராக்கள் பயன்படுத்தப்படலாம். மி 6 சாதனத்தின் இரட்டை கேமராக்களை பொறுத்தமட்டில் 2எக்ஸ் ஆப்டிக் ஜூம் மற்றும் 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (ஐபோன் 7 பிளஸ் போன்றவை) ஆகிய திறன்களை வழங்குகின்றன.

4-அக்ஸிஸ் ஓஐஎஸ்

4-அக்ஸிஸ் ஓஐஎஸ்

தொழில்நுட்ப ரீதியாக மி 6 கேமராக்கள் வெளிப்படையான தொலைதூர காட்சி மற்றும் தொழில்முறை பொக்கே விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. ஆக, மி 5எக்ஸ் சாதனமும் மி 6 6 போன்ற 4-அக்ஸிஸ் ஓஐஎஸ் உடனான இருபுற கேமரா வழங்குமா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உலோக உடல்

உலோக உடல்

கேமராவை தவிர, சியோமி 5எக்ஸ் ஆனது பின்புற ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனர் உடன் ஒரு முழு உலோக யூனிபாடி வடிவமைப்புடன் கொண்டுள்ளது. தொலைபேசி, அதன் அனைத்து உலோக உடல் மற்றும் இரட்டை பின்புற கேமராக்கள் ஆகியாயவைகளுடன் ஐபோன் 7 பிளஸ் போன்றே காட்சியளிக்கிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

முன்புறத்திலும் 2.5டி வளைந்த டிஸ்பிளே கிளாஸ் மற்றும் ஆன்டென்னா கோடுகள் அமைப்பும் இக்கருவியை ஐபோன் போன்று காட்சிப்படுத்த தவறவில்லை. கைரேகை ஸ்கேனரில் சிறிய வேறுபாடு இருக்கலாம் என்பதை காணமுடிகிறது. இக்கருவி கருப்பு, தங்கம் மற்றும் ரோஜா தங்கம் (இளஞ்சிவப்பு).ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.

64 ஜிபி உள் சேமிப்பு

64 ஜிபி உள் சேமிப்பு

வன்பொருள் பக்கத்தில், மி 5எக்ஸ் 5.5 இன்ச் 1080பி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 620 செயலி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. விரிவாக்க ஆதரவு இல்லாத 64 ஜிபி உள் சேமிப்பு, யூஎஸ்பி டைப்-சி சார்ஜ் மற்றும் 3080எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

மியூஐ 9

மியூஐ 9

மி 5எக்ஸ் உடன் இணைந்து, சியோமி நிறுவனம் அதன் ம் மியூஐ 9 இயங்குதளத்தையும் அறிவித்துள்ளது. இது ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயக்கமுறைமையை அடிப்படையாக கொண்ட சியோமி கருவிகளுக்கான அடுத்த தலைமுறை இயங்குதளமாகும். இந்த புதிய மியூஐ 9 மேம்படுத்தல் கொண்டு சியோமி சாதனத்தை மிக வேகமாக இயக்க முடியுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 11 தொடங்கி இதன் பீட்டா வெர்ஷன் கிடைக்கும்.

பீங்கான் பதிப்பு

பீங்கான் பதிப்பு

தோராயமாக ரூ.14,286/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவி இப்போது வரையிலாக மி 5எக்ஸ் சீனாவில் மட்டுமே பிரத்தியேகமாக விற்பனைக்கு உள்ளது. மறுபுறம், மி 6 (6ஜிபி ரேம் + 64 ஜிபி) மாறுபாடு கிட்டத்தட்ட ரூ.23,463/- என்ற விலை நிர்ணயத்தையும், அதன் பீங்கான் பதிப்பு கருவி கிட்டத்தட்ட ரூ. 28,152/- என்ற விலை நிர்ணயத்தையும் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 5X brings the flagship Mi 6's dual rear cameras to the masses. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X