விலை குறைக்கப்பட்ட சியாமி மி எம்5 - சாம்சங் கேலக்ஸி எஸ் 7 ஸ்மார்ட்போன்களின் ஒற்றுமைகள்

By Super Admin
|

ஸ்மார்ட்போன் சந்தையின் கடுமையான போட்டிகளை சமாளிக்க முன்னணி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது விலையையும் அதிரடியாக குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகின்றனர்.

விலை குறைக்கப்பட்ட சியாமி மி எம்5 - சாம்சங் கேலக்ஸி எஸ் 7 ஸ்மார்ட்போன்

கடந்த திங்கள் முதல் சாம்சங் கேலக்ஸி எஸ்7 ரூ.43,400க்கும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ரூ.50,900க்கும் கிடைக்கின்றது.

பெரிய போன், பெரிய பீச்சர்கள் ஆனா விலை கம்மி தான்.!!

சாம்சங் நிறுவனம் சுமார் 5000 ரூபாய் அதிரடியாக விலை குறைத்ததை அடுத்து இதன் போட்டி நிறுவனமான சியாமியும் தனது எம்5 மாடலுக்கு ரூ.2000ஐ குறைத்துள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் உள்ள ஒற்றுமை குறித்து தற்போது பார்ப்போம்

இரண்டு மாடல்களின் டிசைன்கள் எப்படி?

இரண்டு மாடல்களின் டிசைன்கள் எப்படி?

சியாமி மி 5 கருப்பு, கோல்ட் மற்றும் சில்வர் கலர்களிலும் கேலக்ஸி எஸ் 7 மெட்டல் பாடியுடன் கூடிய டிசைனிலும் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமானது. மேலும் இரண்டு மாடல்களிலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியும், இரண்டும் ஃபிங்கர் பிரிண்ட் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டது.

அசத்தலான டிஸ்ப்ளேக்கள்:

அசத்தலான டிஸ்ப்ளேக்கள்:

மேற்கண்ட இரண்டு மாடல்களின் டிசைன்களை பார்க்கும்போது சியாமி மி 5, 5.15 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. மேலும் FHD 1080p IPS LCD பேனலும் அடங்கியது. அதேபோல் கேலக்ஸி எஸ்7 5.1இன்ச் QHD 1440p சூப்பர் அமொல்ட் டிஸ்ப்ளேவை கொண்டது.

சூப்பரான பிராஸசிங் பவர்:

சூப்பரான பிராஸசிங் பவர்:

மேற்கண்ட இரண்டு மாடல்களிலும் குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 820 பிராஸசர் அடங்கியது. மேலும் அட்ரெனோ 530 கிராபிக்ஸும் பொருந்தியது. இந்த பிராஸசர் காரணமாக இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களும் திணறல் இல்லாமல் மென்மையாக ஒர்க் ஆகும்.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் எப்படி?

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் எப்படி?

சாம்சங் கேலக்ஸி எஸ்7 மாடலில் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 200 ஜிபி வரை மெமரி கார்டு போடும் வசதி உண்டு. இதே இண்டர்னல் ஸ்டோரேஜை பெற்றுள்ள சியாமி மி 5 மாடலில் 128 ஜிபி வரை மெமரி கார்டு போட்டுக்கொள்ளலாம். மேலும் இரண்டு மாடல்களிலும் 4 ஜிபி ரேம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமிரா அசத்துமா?

கேமிரா அசத்துமா?

இரண்டு மாடல்களிலும் ஹை குவாலிட்டி இமேஜை தரும் கேமராக்கள் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சம். சியாமி ஸ்மார்ட்போனில் 16எம்பி அளவில் IMX298 சென்சார் உள்ள கேமிரா உள்ளது. மேலும் 4 எம்பி முன்கேமராவில் f/2.0 மற்றும் 80-டிகிரி லென்ஸ் அமைந்துள்ளதால் செல்பியும் சூப்பராக இருக்கும். அதேபோல் சாம்சங் ஸ்மார்ட்போனில் 12 MP அளவில் பின்கேமரா அமைந்துள்ளது. மேலும் OIS மற்றும் வேகத்தை தரும் PDAF அமைந்துள்ளதால் இமேஜ் துல்லியமாக இருக்கும். மேலும் முன்கேமராவும் 5 எம்பி அளவில் உள்ளது.

சாப்ட்வேரில் என்ன சங்கதி உள்ளது?

சாப்ட்வேரில் என்ன சங்கதி உள்ளது?

சியாமி எம்5 ஸ்மார்ட்போனில் MIUI 7 சாப்ட்வேர் உள்ளது. விரைவில் MIUI 8 அப்டேட் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாம்சங் கேலக்ஸியில் ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் TouchWiz UI சாப்ட்வேர் அமைந்துள்ளது.

அதெல்லாம் சரி சார்ஜ் நிக்குமா?

அதெல்லாம் சரி சார்ஜ் நிக்குமா?

சியாமி எம்5 மாடலில் 3,000 mAh பேட்டரி அமைந்துள்ளதால் நீங்கள் தங்குதடையின்றி பல மணிநேரம் தொடர்ந்து பேசலாம். மேலும் இந்த மாடலில் மிக விரைவாக சார்ஜ் ஏறிவிடும் தன்மை உள்ளது. அதேபோல் சாம்சங் மாடலிலும் 3,000 mAh பேட்டரியுடன் வயர்லெஸ் சார்ஜர் உள்ளது என்ன பாஸ், இரண்டையும் கம்பேர் செய்தாகிவிட்டது. விலையும் குறைந்துவிட்டது. அப்புறம் என்ன. உங்க பழைய மொபைலை தூக்கிபோட்டுவிட்டு, புதுமொபைலை வாங்குங்கள்!!

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi has announced a price cut on the Mi 5 flagship smartphone to Rs 22,999. Also, Samsung slashed the price of the Galaxy S7 to Rs 43,400. Take a look at the comparison between these smartphones to know which one you can purchase. Read more...

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X