இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் அசத்தலான சியோமி மி ஏ3 ஸ்மாரட்போன்.!
சியோமி நிறுவனம் இன்று தனது புதிய சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு கொண்டுவருகிறது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் மற்றும் மி.காம் போன்ற தளங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான டிஸ்பிளே:
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 6.08-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 720x1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிராப் ஸ்டைல் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எதிர்பார்த்த சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்த சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மிரட்டலான கேமரா:
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி:
சியோமி மி ஏ3 சாதனத்தில் 4ஜிபி/ 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி மி ஏ3 சாதனத்தின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி ஏ3 சாதனத்தின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. மேலும் ஏர்டெல் சார்பாக குறிப்பிட்ட டேட்டா சலுகையும், பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications