குவாட் கோர் பிராசஸருடன் வரும் ஸியோமி எம்ஐ-2 ஸ்மார்ட்போன்!

இப்போது ஸ்மார்ட்போன்களில் அனைவரும் புதிதாக எதிர்பார்ப்பது ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். புதிய ஆன்ட்ராய்டு வெர்ஷனான இந்த இயங்குதளம் ஸ்மார்ட்போன்களில் இருக்குமா? என்பது பலரது கேள்வியாக உள்ளது.
அந்த வகையில் ஸியோமி நிறுவனம் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் புதிய எம்ஐ-2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.
ஆனால் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தெளிவான தகவல்களை பெற இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன தொழில் நுட்ப வசதிகளுடன் வெளியாகும் என்று சில பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதை பற்றி கொஞ்சம் விரிவாக்கம் செய்யலாம்.
ஸியோமி நிறுவனத்தின் இந்த எம்ஐ-2 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதளத்தினை வழங்குமா? அல்லது விண்டோஸ் இயங்குதளத்தினை கொண்டிருக்குமா? என்பது இன்னும் ஊர்ஜிதம் ஆகவில்லை.
இந்த ஸ்மார்ட்போன் குவாட் கோர் பிராசஸரின் மூலம் சிறப்பாக இயங்க சப்போர்ட் செய்யும். ஸியோமி எம்ஐ-2 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பான தொழில் நுட்ப வசதிக்கு தொடர்ந்து உழைக்கும் வகையில் இதில் 1,700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் நவீன தொழில் நுட்பங்கள் வழங்கப்படும் என்பதால் இதன் விலை கொஞ்சம் அதிகமானதாக இருக்கும். ஸியோமி எம்ஐ-2 ஸ்மார்ட்போன் ரூ. 15,000 விலை கொண்டதாக இருக்கும்.
சீன மார்கெட்டில் அறிமுகமாக இருக்கும் இந்த ஸியோமி எம்ஐ-2 ஸ்மார்ட்போன், சர்வதேச சந்தைகளிலும் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications