முன்பதிவு தொடங்கியாச்சு: 120 ஹெர்ட்ஸ், 108 எம்பி கேமராவுடன் சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ!

|

Mi 11X Pro ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. எம்ஐ 11எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் முன்கூட்டிய ஆர்டர்கள் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த சாதனத்தின் விலை மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

எம்ஐ 11எக்ஸ் ப்ரோ

எம்ஐ 11எக்ஸ் ப்ரோ

எம்ஐ 11எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. சியோமி ஸ்மார்ட்போன் வாங்க ஆர்வம் இருக்கும் பயனர்கள் இதை முன்பதிவு செய்வதற்கான சரியான நேரம் இதுவாகும். ஷிப்பிங் தினத்தை பொறுத்து சாதனம் டெலிவரி கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான்.இன், எம்ஐ.காம்-ல் இந்தியாவில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி

எம்ஐ 11எக்ஸ் ப்ரோ சாதனமானது ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இதன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா அம்சத்தோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4520 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் வேகமான சார்ஜிங் அம்சத்தோடு இது வருகிறது.

எம்ஐ 11எக்ஸ் ப்ரோ விலை அறிமுக சலுகைகள்

எம்ஐ 11எக்ஸ் ப்ரோ விலை அறிமுக சலுகைகள்

இந்தியாவில் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ விலை அறிமுக சலுகைகள் மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். இந்த எம்ஐ 11எக்ஸ் ப்ரோ இன்றுமுதல் எம்ஐ.காம் மூலம் முன்கூட்டிய ஆர்டருக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல் அமேசான்.இன் தளமமும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அமேசான் மூலமாக முன்கூட்டிய ஆர்டர்

அமேசான் மூலமாக முன்கூட்டிய ஆர்டர்

அதேபோல் கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசியமற்ற வழங்குதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளில் இ்நத ஸ்மார்ட்போன் கிடைக்கவில்லை. பொருட்கள் டெலிவரிக்கு தடையில்லா மாநிலங்களிலும், பகுதிகளிலும் பயனர்கள் அமேசான் மூலமாக முன்கூட்டிய ஆர்டர் செய்ய முடியும். அதேபோல் மே 5 முதல் இதன் ஷிப்பிங் தொடங்கும் எனவும் அமேசான்.இன் தளத்தில் மே 3 முதல் ஸ்மார்ட்போன் அனுப்பப்படும் எனவும் எம்ஐ இந்தியா வலைதளம் தெரிவித்துள்ளது.

ரூ.4000 உடனடி தள்ளபடி

ரூ.4000 உடனடி தள்ளபடி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டு சலுகையாக எச்டிஎஃப்சி கிரெடிட் கார்ட்கள் மற்றும் எம்ஐ.காம், அமேசான்.இன் ஆகிய தளங்களில் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது ரூ.4000 உடனடி தள்ளபடி கிடைக்கிறது. அதேபோல் இந்த சாதனம் 12 மாதங்கள் வரை விலையில்லா இஎம்ஐ விருப்ப அம்சமும் இருக்கிறது.

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா, எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா, எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா, எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் யூடியூப் சேனலில் நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வு மூலம் அறிமுகம் செய்யப்பட்டன. எம்ஐ அல்ட்ரா என்பது எம்ஐ 11 தொடரில் இந்தியாவுக்கு வந்த முதல் சாதனமாகும். இந்த சாதனத்தின் பெயர் குறிப்பிடுவது போல் இதில் உள்ள அனைத்து அம்சங்களும் உயர்ரகமாக இருக்கிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

சியோமி எம்ஐ 11 எக்ஸ், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இதில் சில முக்கிய வேறுபாடுகளுடன் ஒரே அம்சங்களை கொண்டிருக்கின்றன. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், எச்டிஆர் 10+ ஆதரவுடன் வருகிறது. எம்ஐ 11 எக்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி அட்ரினோ 650 ஜிபீயு உடன் இயக்கப்படுகிறது. எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி அட்ரினோ 660 ஜிபூயூ உடன் இயக்கப்படுகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ விலை குறித்து பார்க்கையில், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.39,990 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.41,999 எனவும் இருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது. அதேபோல் எம்ஐ 11 எக்ஸ், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் 4520 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi MI 11X Pro Smartphone Pre Booking Started in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X